கோடைகாலத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில், கால்நடைகளுக்கான தீவனத்தைத் தேவையான அளவு கையிருப்பு வைக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தீவனத் தேவை அதிகம் (The need for fodder is high)
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதி சுற்றுப்புற கிராமங்களில் விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடைகளுக்கான தீவனத் தேவையைப் பூர்த்தி செய்ய விவசாயிகள் போராட வேண்டி உள்ளது.
தீவனம் கிடைக்காது (Fodder is not available)
குறிப்பாக மழை மற்றும் பனி காலத்தில் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளுக்குப் பசுந்தீவனங்கள் கிடைக்கும். கோடைகாலம் உள்ளிட்ட மற்ற காலங்களில் தேடி அலைந்தாலும் கிடைப்பது சிரமம்.
இதன் காரணமாகத் தீவனத் தட்டுப்பாடு ஏற்படும். இறவைப் பாசன நிலங்களில் மட்டுமே ஆண்டு முழுவதும் கிடைக்கும் பசுந்தீவனத்தைக் கொண்டு, கால்நடைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது.
சேமிப்பு அவசியம் (Storage is essential)
அறுவடைக்காலத்தில் கிடைக்கும், வைக்கோல், சோளத்தட்டைகளை விலைக்கு வாங்கித் தீவனத்திற்காக முன்கூட்டியே சேமிப்பு வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் கோடை காலத்தில் தீவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், தீவனத் தட்டுப்படும். அதேநேரத்தில் செயற்கைத் தீவனங்களால், கூடுதல் செலவும் ஏற்படக்கூடும்.
விவசாயிகள் முனைப்பு (Farmers initiative)
எனவே இத்தகைய செலவுகளில் இருந்துத் தப்ப வேண்டுமானால், தீவனங்களை முன்கூட்டியே கையிருப்பு வைத்துக்கொள்வது சிறந்தது. இதன் அடிப்படையில், தீவனங்களைக் கையிருப்பு வைக்கும் பணியில் விவசாயிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
கையிருப்பு தேவை (Reserve required)
இதுகுறித்து ஆண்டிப்பட்டி பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் ஆகியவை அதிகம் தேவைப்படும். இப்பகுதியில் நெல் விளைச்சல் குறைந்ததால், வெளி ஊர்களில் இருந்து வைக்கோல் வாங்கி இருப்பு வைக்கப்படுகிறது.
கோடையை ஒட்டி, அடுத்த 3 மாதங்களுக்கு மாடுகளின் தீவனங்களுக்கு ஏற்படும் விலைஅதிகரிப்பும், தட்டுப்பாடும் மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனை சமாளிப்பதற்காக, முன்கூட்டியே திட்டமிட்டு, தீவனங்களை சேமித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்- தேர்தல் கண்காணிப்புக் குழு அதிரடி!
Share your comments