1. கால்நடை

தீவனப் செலவினை குறைத்து அதிகப்படியான லாபம் தரும் உப தொழில்

KJ Staff
KJ Staff
Profitable Goat Farming

சமீப காலமாக பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை பிரபலமாகி வருகிறது. ஆடுகளில் நோய் பரவுவதை தவிர்ப்பதற்காக இம்முறை கையாளப்படுகிறது. தீவிர ஆடு வளர்ப்பு முறையில் ஆடு வளர்க்கும் பெரும்பாலான விவசாயிகள் பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையையே பின்பற்றுகின்றனர்.

இந்த முறையில் ஆடுகளானது தரையில் இருந்து நான்கு முதல் ஐந்து அடி வரை உயரம் கொண்ட பரண் போன்ற அமைப்பின் மீது வளர்க்கப்படுகின்றன. இந்த பரண் மரச்சட்டம், பிளாஸ்டிக் அல்லது இரும்பு போன்றவற்றால் அமைக்கப்படுகிறது.

மரச் சட்டங்களை கிடைமட்டமாக வரிசையாக அடுக்கி வைத்து இந்த அரண் அமைக்கப்படுகிறது. தற்போது இரும்பு மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றைக் கொண்டு பரண் அமைப்பதற்கான தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. இரு சட்டங்களுக்கு  இடையிலான இடைவெளி ஒன்று முதல் இரண்டு மில்லி மீட்டர் வரை இருப்பதால் புழுக்கை மற்றும் சிறுநீர் போன்றவை கீழே வடிந்து விடுவதற்கு உதவியாக இருக்கின்றன.

Shed Farming

தரையிலிருந்து 4 முதல் 5 அடி உயரத்தில் இந்த பரண் போன்ற அமைப்பு இருப்பதால் ஆட்டின் சிறுநீர் மற்றும் சாணம் போன்றவை பரணிற்கு கீழே சேகரமாகிறது. தினந்தோறும் சுத்தம் செய்ய தேவையில்லை என்பதால் வேலையாட்கள் தேவையும் குறைவாக இருக்கிறது.  பெரும்பாலும் சாணம் மற்றும் சிறுநீரின் வழியே தான் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இந்த முறையில் நோய் பரவுவதற்கான வாய்ப்பும் குறைகிறது.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக் காலங்களுக்கு முன்னர் குடற்புழு நீக்க மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனையின்படி தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்வது நல்லது.

இம்முறையில் பரணிக்கு கீழே சேகரமாகும் ஆட்டுப் புழுக்கைகளில் அதிகளவில் கரையான் போன்றவை உற்பத்தியாகின்றன. எனவே, பரணிற்கு கீழே கோழிகளையும் சேர்த்து வளர்க்கலாம். கோழிகளுக்கான தீவனப் செலவினை குறைத்து அதிகப்படியான லாபம் பெறுவதற்கும் இந்த முறை பயன்படுகிறது.

சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 
சென்னை-07

English Summary: Are you seeking commercial Goat farming Poultry shed? Published on: 20 December 2019, 05:44 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.