உயிரியல் முறையில் நோய் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் போன்றவை அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.
டிரைகோடெர்மாவிரிடி
- விதை நேர்த்தி : 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியை 1 கிலோ விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- விதை நேர்த்தியால் கட்டுப்படும் நோய்கள்: பயிர் வகை பயிர்கள், நிலக்கடலை, எள், சூரியகாந்தியில் உண்டாகும் வேரழுகல் மற்றும் வாடாமல் நோய்கள், காய்கறி பயிர்களில் ஏற்படும் நாற்றழுகல் மற்றும் வேரழுகல்
- மண்ணில் இடுதல்: 2.5 கிலோ சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் உடன் 50 கிலோ மக்கிய குப்பை அல்லது எருவுடன் கலந்து மண்ணில் இடுவதால் மஞ்சள் கிழங்கு அழுகல் நோய் போன்ற மண்ணின் மூலம் பரவும் நோய்களின் கட்டுப்பாடு கிடைக்கிறது.
சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் உபயோகிக்கும் முறை
- விதை நேர்த்தி : 1 கிலோ விதைக்கு 11 கிராம் என்ற அளவில்.
- நாற்று நனைத்தல்: 2.5 கிலோ/ எக்டருக்கு தேவையான நாற்று
- வயலில் இடுதல்: ஒரு எக்டருக்கு 2.5 சதம் 2.5 கிலோ + 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு
- தெளிப்பு முறை: 0.2 சதம் (2 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கவும்)
Share your comments