விவசாயத்திற்கு ஆதரவுத் தொழிலாகக் கருதப்படும் மாட்டுப் பண்ணை தற்போது, லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. அதிலும் எருமை மாடு வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டும் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறி வருகிறது.
மற்றவர்களிடம் கை கட்டி நிற்கக்கூடாது. செய்தால் சொந்தத் தொழில்தான் என சவால்களை எதிர்கொள்ளத் துடிக்கும் இளைஞரா நீங்கள்? அப்படியானால் இந்தத் தொழில் நிச்சயம் உதவும். வெளிநாட்டு மாட்டுப்பண்ணை முதலாளிகள் போல் சொகுசாக வாழ விரும்பினால், கருப்புத்தங்கம் என்று அழைக்கப்படும் முர்ரா எருமையை வளர்க்க முன்வரவேண்டும்.
இந்தத் தொழில் மூலம் மாதம் லட்சக்கணக்கான ரூபாய் எளிதாக சம்பாதிப்பது எளிது. ஏனெனில், எருமை இனங்களிலேயே முர்ரா இனம் சிறந்ததாக கருதப்படுகிறது. அவற்றின் தேவையும் மிக அதிகமாக உள்ளது.
உண்மையில், இந்த இன எருமைகள் மற்ற எருமைகளிலேயே நல்ல உயரமானது. அதேபோல, இந்த எருமைகள் மற்ற இனங்களுடன் ஒப்பிடும்போது அதிகமான பால் தருகின்றன. அதனால்தான் இதை 'கருப்பு தங்கம்' என்றும் அழைக்கிறார்கள்.
முர்ரா எருமையை தூரத்தில் இருந்து கூட அடையாளம் கண்டுபிடிக்கலாம். இந்த இனத்தின் நிறம் அடர் கருப்பாக இருக்கும். அதன் தலை சிறியதாக இருக்கும். இந்த வகை எருமைகள் ஹரியானா, பஞ்சாப் போன்ற பகுதிகளில் அதிகமான அளவில் வளர்க்கப்படுகின்றன.இதுமட்டுமின்றி, இத்தாலி, பல்கேரியா, எகிப்து போன்ற நாடுகளில் பால் பண்ணைகளில் இந்த வகை எருமைகள் அதிகமாக வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
20 லிட்டர்
மற்ற எருமைகளை விட இந்த எருமை அதிக பால் கொடுப்பதால், இதில் லாபமும் அதிகம். முர்ரா இனத்தைச் சேர்ந்த ஒரு எருமை தினமும் 20 லிட்டர் வரை பால் தரும். அவற்றை நன்றாகப் பேணிப் பாதுகாத்து வளர்த்தால் 35 லிட்டர் வரை கூட பால் கொடுக்கும்.
இந்த எருமைகள் தரும் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், இந்த எருமைகளை விற்பனை செய்வதன் மூலமும் நல்ல லாபம் ஈட்டலாம். உயரமும் அதிகமாக இருப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.
இந்த வகை எருமை மாடுகளின் விலை ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இருக்கும். சாதாரண இன எருமைகளை ஒப்பிடும்போது இவற்றின் விலை இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கொளுத்தும் வெயிலில் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதா?
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
Share your comments