1. கால்நடை

கறவை மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Breeding management in dairy cows!
Credit: One Green planet

மாடுகள் பராமரிப்பில் சினை குறித்த விழிப்புணர்வு மிக மிக அவசியம். ஏனெனில், நாம் செய்யும் மிகப்பெரிய தவறு மாடுகள் பால் கொடுக்கும் வரைக்கும் அதனுடைய சினை பற்றியோ, சினைப் பருவ அறிகுறிகளைப் பற்றியோ, சினை ஆக்குவதற்கு தேவையானப் பராமரிப்பு முறைகளைப் பற்றியோக் கண்டுகொள்வதே இல்லை.

சினையே முக்கியம் (Breeding is important)

இதுவே கறவை மாடு வளர்ப்பின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.
உங்கள் மாடுகளைக் கன்று ஈன்ற மூன்று மாதத்திற்குள் சினை ஆக்கினால் மட்டுமே, உங்களால் கறவை மாடு வளர்ப்பில் அல்லது பால் பண்ணைத் தொழிலில் மிகச் சிறந்த லாபத்தைக் காண முடியும்.

கன்று ஈன்ற 2-வது மாதத்திற்குள் சினைப் பருவத்திற்கு வந்துவிடும். மேலும் மாடுகளின் ஒவ்வொரு சினைப் பருவமும், மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு மாடுகள் சினைப் பருவத்திற்கு வந்தவுடன் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.

அறிகுறிகள் (Symptoms)

  • மாடுகள் கத்திக்கொண்டே இருக்கும்.

  • மற்றொரு மாட்டின் மீதுத் தாவும்.

  • கண்ணாடி நிறத்தில், கெட்டியாகத் திரவம் அறையில் இருந்து வழிந்தோடும்.

  • தினமும் கொடுக்கும் பாலைவிட, பாலின் அளவு சற்றுக் குறைவாகவே இருக்கும்.

    மிகுந்த சுறுசுறுப்பாக இருக்கும்.

கடைப்பிடிக்க வேண்டியவை (Things to follow)

  • கன்று ஈன்று 7-10 நாட்கள் கழித்து மாடுகளுக்குக் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.

  • கன்று ஈன்று 10 முதல் 15 நாட்கள் கழித்து மாடுகளுக்குக் கால்நடை மருத்துவர் மூலம் கால்சியம் போட்டுக்கொள்ள வேண்டும்.

  • கன்று ஈன்ற 30 நாட்கள் கழித்துத் தாது உப்புக்கலவை(Mineral Mixture) 30 கிராம் முதல் 50 கிராம் வரை இரண்டு மாதங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

  • பசுந்தீவனங்கள் கிடைக்கப் பெறாத மாடுகளுக்கு வைட்டமின் ஏ ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் மாடுகள் சினைப் பருவத்திற்கு முறையாகவும், தகுந்த (21 நாட்கள்) இடைவெளியிலும் வருமாறு செய்ய முடியும்.

  • மேலும் கன்று ஈனும் சமயத்தில் ஈன்றக் கன்றுகள் குருட்டுத்தன்மை இல்லாதவாறும் பாதுகாக்க முடிகிறது.

  • மாடுகள் சினைப் பருவத்திற்கு வந்தவுடன் கால்நடை மருத்துவரை அணுகி காலை, மாலை என இரு வேளைகளிலும் ஊசிப் போட்டுக்கொள்ள வேண்டும்.

  • முதல் சினை ஊசிக்கும், 2வது சினை ஊசிக்கும் இடையே 8 மணி நேர இடைவெளி இருத்தல் அவசியம்.

  • ஒரே நேரங்களில் இரண்டு சினை ஊசி போட்டுக்கொள்வதை விட இடைவெளியைக் கடைப்பிடிக்கும்போது, மாடுகள் சினை ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

  • மேலும் சில மாடுகள் அவற்றின் கன்று ஈனும் காலத்தில் நஞ்சுக் கொடியை வெளியேற்றுவதில்லை. அப்படிப்பட்ட மாடுகளில் கால்நடை மருத்துவர்களால், நஞ்சுக்கொடி கைகளினால் மாடுகளின் கருப்பையில் இருந்து வெளியே எடுக்கப்படுகிறது. இத்தகைய மாடுகளைத்தான் சினை ஆக்குவதில் சிரமம் இருக்கிறது. அல்லது காலம் தாழ்த்திய சினை ஏற்படுகிறது.

காலம் தாழ்த்திய சினையைத் தடுக்க (To prevent premature ejaculation)

  • நஞ்சுக் கொடி எடுக்கப்பட்ட 3 நாட்களுக்குள் தொடர்ந்து கால்நடை மருத்துவரின் சிகிச்சை மாடுகளுக்கு அவசியம்.

  • கன்று ஈன்ற 30-வது நாளில் இருந்து தாது உப்பு 30 முதல் 50 கிராம் வரை 2 மாதங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

  • மாடுகள் சினைப்பருவத்தை அடைந்தவுடன் முதல் பருவத்தில் சினை ஊசிப் போடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கால்நடை மருத்துவரை அணுகி, கருப்பை எதிருயிரி மருந்து (யூடிரின் ஆன் பயாடிக்)கொண்டு கருப்பையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

  • ஒன்று அல்லது இரண்டு முறை கருப்பையைச் சுத்தம் செய்த பிறகு, அடுத்து வரும் சினைப் பருவத்தில் மாடுகளுக்கு சினை ஊசிப் போட்டுக் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க...

சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை!

கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்

பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!

English Summary: Breeding management in dairy cows! Published on: 05 May 2021, 10:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.