எருமை மாடானது நல்ல அதிக கொழுப்புச் சத்துள்ள பால் மட்டுமன்றி இறைச்சி மற்றும் வேளாண் வேலைகளுக்கும் பயன்படுகிறது. எல்லா வளர்ப்பு மிருகங்களிலும் எருமை மாடுகளே அதிக உற்பத்தி தரக்கூடியவை. அதிலும் ஆசிய எருமைகள் அதிகத் திறனுடன் உழைக்கக்கூடியவை. ஆசிய எருமைகள் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் டன்கள் உற்பத்தி தருகின்றன. அதில் 30 மி. டன்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பெறப்படுகிறது. ஆள் திறன் மற்றும் செலவு குறைவு. எனவே தான் எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு எருமை மாடு வளர்ப்பு சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு எருமை மாடு இறைச்சிக்கென வளர்க்கப்படும் போது கிடைக்கும் (350 - 450 கி.கி எடை) இறைச்சியானது அதிக இலாபம் தரக்கூடியது.
முர்ரா
-
மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த இன எருமை மாட்டினம் ஹரியானா மாநிலத்தின் ரோட்டக், ஹிசார் மற்றும் ஜின்த் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் நபா, பாட்டியாலா மாவட்டங்களிலிருந்தும், தில்லி மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்தும் தோன்றியவை.
-
இவற்றின் உடல் அடர்ந்த கருப்பு நிறமாகக் காணப்படும். வாலிலும், முகத்திலும், சில சமயங்களில் கால்களிலும் வெள்ளை நிறம் காணப்படும்.
-
இவற்றின் கொம்புகள் நன்கு வளைந்திருப்பதே இந்த இன எருமைகளின் முக்கியமான பண்பாகும்
-
இவ்வின எருமைகள் அதிக பால் உற்பத்திக்கும், பாலில் உள்ள அதிக கொழுப்புச்சத்திற்கும் இந்தியாவில் பெயர் பெற்றவை.
-
முர்ரா இன எருமைகளின் பாலில் 7 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கும். இவற்றின் சராசரி பால் உற்பத்தி அளவு 1500-2500 கிலோவாகும். மேலும் இவற்றின் ஒரு நாள் சராசரி பால் உற்பத்தி 6.8 கிலோ.
-
குறைந்த உற்பத்தி கொண்ட நாட்டு எருமையினங்களை கலப்பினம் செய்வதற்கும் இவ்வின எருமைகள் பயன்படுகின்றன.
சுர்தி
-
இம்மாட்டினங்களின் தாயகம் குஜராத் மாநிலத்தின் கெய்ரா மற்றும் பரோடா மாவட்டங்களாகும்.
-
இவற்றின் தோலிலுள்ள முடி பழுப்பு நிறம் முதல் சாம்பல் நிறம் வரை வேறுபடும். தோல் கருப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
-
இவற்றின் கொம்புகள் அரிவாள் போன்று வளைந்து, நீண்டு தட்டையாகக் காணப்படும்.
-
தாடையைச் சுற்றியும், இரண்டு கால்களுக்கும் இடையில் உள்ள நெஞ்சுப்பகுதியிலும் வெள்ளை நிறம் காணப்படுவது இவ்வின எருமைகளின் தனியான குணநலனாகும்.
-
இவற்றின் பால் உற்பத்தி 900-1300 கிலோவாகும்.
-
இவ்வின எருமைகளின் பால் அதிக கொழுப்புச் சத்துக்கு பெயர் பெற்றது (8-12%).
3000 கிலோ வரை பால் உற்பத்தி தரும் பசு மாட்டு இனங்கள்! - முழுவிவரம் உள்ளே!!
ஜஃப்ராபாடி
-
இவ்வின எருமைகளின் தாயகம், குஜராத் மாநிலத்தின் கிர் காடுகள், கட்ச், ஜாம் நகர் மாவட்டங்களாகும்.
-
இவற்றின் கொம்புகள் திடமாக வளர்ந்து, கழுத்து வரை சாய்ந்து பின் நேராக வளைந்து கூர்மையாக இருக்கும்.
-
இவற்றின் பால் உற்பத்தி 100-200 கிலோக்களாகும்.
-
இவ்வின காளைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதால் உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
-
இந்த எருமையினங்கள் பொதுவாக நாடோடி மக்களான மல்தாரிகள் என்பவர்களால் வளர்க்கப்படுகின்றன.
பாதாவாரி
-
இவ்வின எருமைகளின் தாயகம் உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் எட்டாவா மாவட்டங்களும், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டமுமாகும்.
-
இவற்றின் உடல் செம்பு நிறத்தில் காணப்படுவது இவற்றின் தனிச்சிறப்பாகும். இவற்றின் கண் இமைகள் பொதுவாக செம்பு நிறத்திலோ அல்லது வெளிறிய பழுப்பு நிறத்திலோ காணப்படும்.
-
இவற்றின் கழுத்தின் அடிப்பகுதியில் இரண்டு வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும்.
-
இவற்றின் சராசரி பால் உற்பத்தி 800-1000 கிலோவாகும்.
-
இந்த எருமையினக் காளைகள் வேலைத்திறனுக்கும் அதிக வெப்பத்தினைத் தாங்குவதற்கும் பெயர் பெற்றவை.
-
இந்த எருமையினங்களின் பாலில் கொழுப்புச்சத்து 6-12.5சதவிகிதம் காணப்படும். இந்த எருமையினங்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த தீவனத்தை அதிக கொழுப்புச்சத்து மிகுந்த பாலாக மாற்றும் திறனுடையவை.
அதிக லாபம் தரும் இறைச்சி கோழி வளர்ப்பு! இப்போதே எளிதில் தொடங்கலாம்!
நிலிராவி
-
இந்த எருமையினம் பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் சட்லெஜ் நதி கரையிலும், பாகிஸ்தானின் சாகிவால் மாவட்டத்திலும் தோன்றியது.
-
இந்த எருமையினங்களின் தனிச்சிறப்பு இவற்றின் கண்களாகும்.
-
இவ்வின எருமைகளின் பால் உற்பத்தி ஒரு கறவை காலத்தில் 1500-1850 கிலோவாகும்.
-
கன்று ஈனும் இடைவெளி 500-550 நாட்களாகவும், முதல் கன்று ஈனும் வயது 50 மாதங்களாகவும் இருக்கும்
மேசானா
-
மேசானா இன எருமைகள் பால் உற்பத்திக்காக குஜராத்தின் மேசானா நகரிலும், அருகிலுள்ள மகாராஷ்ட்டிரா மாநிலத்திலும் வளர்க்கப்படுகின்றன.
-
மேசானா இன எருமைகள் சுர்தி மற்றும் முர்ரா எருமைகளை கலப்பினம் செய்ததால் தோன்றிய எருமையினமாகும்.
-
இவற்றின் பால் உற்பத்தி 1200-1500 கிலோவாகும்.
-
கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.
அடிச்சுத்தாக்கும் வெயில் - அதிரடியாகக் குறைந்தது பால் உற்பத்தி!
நாக்பூரி
-
மகாராஷ்டிராவின் நாக்பூர், அகோலா மற்றும் அம்ராவாடி மாவட்டங்கள் இந்த எருமையினங்களின் பூர்வீகமாகும்.
-
இவை கருப்பு நிறத்துடன், கால்கள், முகம் மற்றும் வாலில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும்.
-
இந்த எருமையினங்கள் எலிட்ச்புரி அல்லது பார்பாரி என்றும் அறியப்படுகின்றன.
-
இந்த எருமையினங்களின் முதல் கன்று ஈனும் வயது 45-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.
தோடா
-
தோடா இன எருமைகள் தென்னிந்தியாவின் நீலகிரி மலைப்பகுதியிலுள்ள தோடா என்ற பழங்குடிகள் பெயரைக் கொண்டவை.
-
இவை பெரும்பாலும் பழுப்பு நிறத்துடன் அல்லது சாம்பல் நிறத்துடன் காணப்படும்.
-
நீலகிரியிலிருந்து தோன்றியதால் இந்த எருமையினங்கள் மற்ற எருமையினங்களிலிருந்து வேறுபட்டவை.
-
இவற்றின் உடலில் அடர்த்தியாக ரோமங்கள் காணப்படும்.
-
இவை எப்பொழுதும் அலைந்து கொண்டே இருக்கும் தன்மையுடையவை.
-
இந்த எருமைகளின் ஆண்டு பால் உற்பத்தி 500 கிலோ. இவற்றின் பால் அதிக கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளதற்காகப் பெயர் பெற்றவை. இந்தப் பாலில் 8 சதவீதக் கொழுப்புச் சத்து உண்டு.
காளை மாடுகளின் இனவிருத்திக்கான பராமரிப்பு- சில ஆலோசனைகள்!
Share your comments