பகல் நேர வெப்ப நிலை உயர்ந்து வருவதால், கால்நடைகள் பராமரிப்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) அறிவுறுத்தியுள்ளது.
விழிப்புணர்வு (Awareness)
மாவட்ட வாரியாக, வானிலை மற்றும் அது சார்ந்த, முன்னேற்பாடுகள் குறித்து, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், உழவன் செயலி வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், பகல் நேர வெப்ப நிலை உயர்ந்து, காற்றின் ஈரப்பதம் குறைந்து வருகிறது.இந்நிலை தொடரும் பட்சத்தில் , கால்நடை மற்றும் கோழிகள் மிகுந்த பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
ராணிக்கெட் நோய் (Ranicket disease)
இதனைக் கருத்தில்கொண்டு, கால்நடை மற்றும் கோழிகளுக்கு, போதுமான அளவு சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும்.தற்போது, நிலவும் வானிலையால், வீடுகளில் வளர்க்கப்படும், கோழிகளுக்கு, ராணிகெட் நோய் தாக்க வாய்ப்புள்ளது.எனவே, கோழிகளுக்கு, அருகிலுள்ள, கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி போட வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழிகளைத் தாக்கும் நோய்களில் முக்கிய நோயான வெள்ளைக்கழிச்சல் நோயிற்கு இயற்கை முறையில் மருந்து அளித்து அவற்றைக் குணமாக்கலாம்.
வெள்ளைக் கழிச்சல் நோய் (Ranikhet Disease)
இந்த வெள்ளைக்கழிச்சல் நோய் ( ranikhet disease )என்பது நச்சு உயிரி மூலம் பரவும் நோய் ஆகும்.
இயற்கை மருத்துவம் (Natural Medicine)
தேவையான பொருட்கள் (Ingredients)
சீரகம் 10 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் 5 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
இவை அனைத்தையும் அரைத்து அரிசி குரணையில் கலந்து 3 முதல் 5 நாட்கள் கொடுக்கவும். அல்லது சிறு உருண்டைகளாக கோழிகளுக்கு சாப்பிடக் கொடுக்கவும்.
இந்த மருந்து கொடுக்கும்போது, குறிப்பாக கருப்பட்டி கலந்த குடிநீர் (அ) சீரகத் தண்ணீர் வழங்குவது அவசியம்.
இந்த இயற்கை மருந்தைக் கோழிகளுக்கு வாய் வழியாகக் கொடுத்து வர நோய் படிப்படியாக குணமாவதைக் கண்கூடாகக் காணலாம்.
மேலும் படிக்க...
சிலிண்டரை 69 ரூபாய்க்கு புக் செய்ய அருமையான வாய்ப்பு- தவறவிடாதீர்கள்!
Share your comments