கறவை மாடு வாங்க மானியம் வழங்கும் திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொள்ளாச்சியைச் சேர்ந்த கால்நடை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நஷ்டம் (Loss)
அதிக விளைச்சல், வரத்து அதிகரிப்பு உள்ளிட்டவற்றால், விவசாயம் சில வேளைகளில் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
வாழ்வாதாரம் (Livelihood)
குறிப்பாக வறட்சி, விளைபொருட்களுக்கு விலையின்மை மற்றும் பூச்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட சூழ்நிலைகளில், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகிறது.
ஆதரவுத் தொழில் (Support industry)
அத்தகையக் காலகட்டத்தில், நஷ்டத்தை எதிர்கொள்ள உதவுவதுடன், வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படாமல் விவசாயிகளைப் பாதுகாக்கும் தொழில் எதுவென்றால், அதுதான் கால்நடை வளர்ப்பு.
இதனைக் கருதியே, கால்நடை வளர்ப்பு என்பது விவசாயத்தின் ஆதரவுத் தொழிலாகக் கருதப்படுகிறது.
வளர்ப்பதில் சிக்கல் (Trouble in raising)
ஆனால், இயந்திரமயமான வாழ்க்கை, வாகனங்கள் அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் என பல்வேறு விதமான காரணங்களால் கால்நடைகளை வளர்ப்பதிலும், விவசாயிகள் பலவிதமான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
தென்னை விவசாயம் (Coconut farming)
சிரமங்கள் பல இருந்தாலும், பொள்ளாச்சிப் பகுதியில் பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள், தென்னை விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளை ஈத் தாக்குதல் (White Fly Attack)
ஆனால், தற்போது, தென்னை சாகுபடியில் வெள்ளை ஈ தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வங்கிக்கடன் பெற்று மாடுகள் வாங்கிய விவசாயிகள், கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து, கறவை மாடு வாங்கவும், தீவன சாகுபடிக்கும், வேளாண் துறை வாயிலாக அரசு மானியம் அளிக்க முன்வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாடு வாங்க மானியம் (Subsidy to buy cow)
இதே போன்ற மானியத் திட்டம், கடந்த 2017ல் வேளாண் துறையால் செயல்படுத்தப்பட்டது. அதில், மாடு வாங்கவும், ஒரு ஹெஹக்டேரில் தீவனப்பயிர் சாகுபடி செய்யவும், 27,500 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது.
அதிகரிக்கும் செலவுகள் (Increasing costs)
தற்போது மாடுகளின் விலை மற்றும் சாகுபடி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், மானியத்தை, 40,000 ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும் என சிறு, குறு விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் படிக்க...
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!
குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!
Share your comments