1. கால்நடை

கால்நடைகளைத் தாக்கும் வாய்ப்பூட்டு நோய்- தடுக்க எளிய வழிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cataracts - Simple Ways to Prevent!
Credit: Kalignar Seithigal

கால்நடைகளைப் பொறுத்தவரை, அவற்றைத் தாக்கும் நோய்களையும், எதிர்கொள்ள ஏதுவான மருந்துகளையும் தெரிந்துகொள்வது என்பது மிக மிக முக்கியமானது.

வாய்ப்பூட்டு நோய் (Mouth disease)

அந்த வகையில், டெட்டனஸ் அல்லது வாய்ப்பூட்டு நோய் என்பது, பாலூட்டிகளைப் பாதிக்கும் வாய்ப்பூட்டு நோய் பாக்டீரிய நச்சினால் ஏற்படுத்தப்படுகிறது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தசைகளில் வலிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. குறிப்பாக மாடுகளை விட செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள், இந்த நோயினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன

நோய்க்கான காரணங்கள் (Causes of the disease)

  • கிளாஸ்டிரிடியம் டெட்டனை எனும் பாக்டீரியா தாவர உண்ணிகளின் குடலில் சாதாரணமாக இருக்கும்.

  • இப்பாக்டீரியாக்களின் நச்சு, வாய்ப்பூட்டு நோய் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

    இந்த பாக்டீரியா முற்றிலும் ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலையில் மட்டுமே வளரும்.

  • இந்த பாக்டீரியாக்களின் ஸ்போர்கள் மிகவும் கடினமானவை. மண்ணில் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கும்.

  • இந்த ஸ்போர்கள் 115 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30-60 நிமிடங்கள் வைத்திருந்தால் மட்டுமே கொல்லப்படும்.

  • இந்த பாக்டீரியாக்கள் வெப்பம் மற்றும் கிருமி நாசினிகளால் எளிதில் கொல்லப்பட்டுவிடும்.

விரைவில் சேதமடையாது (Not damaged quickly)

ஆனால் இதன் ஸ்போர்கள் பல்வேறு விதமான இயற்பியல், வேதியியல் பொருட்களால் சேதாரமடையாது.கிளாஸ்டிரிடியம் டெட்டனை பாக்டீரியா கால்நடைகளின் உடலில் உள்ள காற்றுப் புகாத புண்களில் பல்கிப் பெருகி அவற்றின் நச்சினை உண்டாக்குகின்றன. 

நீண்டகாலம் உயிர்வாழும் (Longevity)

இந்த பாக்டீரியாக்கள், சுற்றுப்புறக் காரணிகளுக்கு மிகுந்த எதிர்ப்புத்திறன் வாய்ந்தவை. எனவே இவை தெருவிலிருக்கும் குப்பைகள், தோட்டத்திலிருக்கும் மண், விலங்குகளின் சாணம் போன்றவற்றில் நீண்டகாலம் உயிரோடு வாழும் தன்மைப் படைத்தது.

மனிதர்களுக்கும் (For humans)

கால்நடைகளின் சாணத்தில் இந்த பாக்டீரியாக்கள் நீண்ட நாள் உயிரோடு இருக்கும். எனவே இவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய் பரப்புவதில் ஆதாரமாக இருக்கின்றன. ஆடுகளில் உள்ள ஆழமான புண்களில் இந்த பாக்டீரியாக்களின் ஸ்போர்கள் உள்ளே நுழைந்து பல்கிப்பெருகி நச்சினை உற்பத்தி செய்கின்றன.

பாக்டீரியா (Bacteria)

ஊசி போடுவதால் ஏற்படும் புண்கள், நாய்க்கடியால் ஏற்படும் புண்கள், தடுப்பூசி போடுவதால் ஏற்படும் புண்கள், இரசாயன உப்புகளான கால்சியம் உப்புகள், லேக்டிக் அமிலம் போன்றவற்றால் உடலில் ஏற்படும் புண்களில் டெட்டனஸ் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி இந்நோய் ஏற்படுகின்றது.

தொப்புள் கொடி (Umbilical cord)

புதிதாகப் பிறந்த கால்நடைகளின் தொப்புள் கொடி வழியாக இந்த பாக்டீரியா உள்ளே சென்று நோயினை ஏற்படுத்துகிறது.மேய்ச்சலின் போதும், நிலத்தினை உழும் போதும், கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு ஓட்டிச் செல்லும் போதும்ஏற்படும் புண்கள், பல் சொத்தை, அறுவை சிகிச்சையின் காரணமாக ஏற்படும் புண்கள், கூர்மையான பொருட்களால் கால்நடைகளின் மேல் ஏற்படும் புண்கள் நோய்க்கிருமியால் அசுத்தமடையும் போது டெட்டனஸ் நோய் எளிதில் பரவுகிறது.

நோய் அறிகுறிகள் (Disease Symptoms)

  • ஆடுகள் தீவனம் எடுக்காமல், உடல் விரைப்பாகவேக் காணப்படும்.

  • முதலில் ஆடுகளின் நடமாட்டம் குறைவாக இருக்கும்.

  • பிறகு தசைகள் இறுக்கமாகி, ஆடுகள் நடப்பது கடினமாகும்.

  • வழக்கம் போல் நடக்கமால், அசாதாரணமாக ஆடுகள் நடக்கும்.

  • கால்களில் விரைப்புத்தன்மை ஏற்பட்டு, கழுத்து மற்றும் முதுகுப்பகுதி நீண்டு, வளைந்தும் காணப்படுதல். 

  • தசைகள் இறுக்கமாவதால், ஆடுகள் வாயினைத் திறக்க முடியாமல் இருக்கும் நிலை ஏற்படுவதால், இதற்கு வாய்ப்பூட்டு நோய் என்று பெயர்.

மரக்குதிரைப் போன்று (Like a wooden horse)

மூன்றாம் கண்இமை சவ்வு கண்ணின் உட்பகுதியிலிருந்து வெளியே துருத்திக்கொண்டு காணப்படுதல், தலை ஒரு பக்கமாகத் திரும்பிக் காணப்படுதல், காதுகள் நேராகத் தூக்கிக்கொண்டு இருத்தல், காதுகளை அசைக்க முடியாமை, போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட ஆடுகள் மரக்குதிரை போன்று காணப்படும்.

அமைதியின்றி இருத்தல் (Being restless)

முகத்திலுள்ள தசைகள் இறுக்கமாவதால், ஆடுகள் எப்போதும் அமைதியின்றி இருப்பது போன்று தோன்றும். அசை போடுவது பாதிக்கப்பட்டு, வாயிலிருந்து உமிழ்நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். அசையூண் வயிற்றில் தீவனத்தின் செரிமானத்திறன் பாதிக்கப்படுவதால், வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டெட்டனஸ் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் சிறிய தூண்டுதலுக்கு அதிகமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். திடீரெனச் சத்தம் ஏற்பட்டாலோ அல்லது நேரடியாகத் தொடர்பு ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்ட கால்நடைகளில் உடனடியாக வலிப்பு ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் (Control methods)

  • இரண்டு தடுப்பூசிகளை நான்கு வார கால இடைவெளியில் ஆடுகளுக்குப் போட வேண்டும்.

  • பிறகு வருடம் ஒரு முறை தவறாமல் தடுப்பூசியினைப் போட்டுக் கொள்ளவேண்டும்.

  • டெட்டனஸ் பாக்டீரியாவின் செயலிழக்கப்பட்ட நச்சினை கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்துவதால், நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

  • சினையுற்றிருக்கும் செம்மறியாடுகளுக்கு குட்டி ஈனுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக தடுப்பூசியினை அளிப்பதால், சீம்பால் வழியாக நோய் எதிர்ப்புத் திறன் குட்டிகளுக்குச் சென்றடையும்.

  • சாதாரணமாக ஆடுகளின் உடல் மேல் ஏற்பட்டிருக்கும் புண்களை முறையாக சுத்தம் செய்து, அது வெளிப்புறக் காரணிகளால் அசுத்தமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

  • ஆடுகள் குட்டிகள் ஈனும் போதும், குட்டிகள் ஈன்ற பிறகும் முறையான சுகாதார மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவதால் குட்டிகளுக்கு இந்நோய் வருவதைத் தடுக்கலாம்.

  • முள் வேலிகளுக்கு அருகில் கால்நடைகள் மேய்வதைத் தடுக்க வேண்டும்

    கொட்டகைகளில் தண்ணீரைத் தெளித்து தூசுகள் பறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

  • கருப்பை வெளியேத்தள்ளுதல் மற்றும் நஞ்சுக்கொடி உள்ளே தங்கிய ஆடுகளுக்கு, முறையான மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.

    அறுவை சிகிச்சைக்கு முன்பாக அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் பொருட்களை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

  • ஆடுகளின் உடலிலுள்ள ஆழமான புண்களைக் கிழித்து விட்டு, அவற்றில் சேர்ந்திருக்கும் திரவத்தை வடியுமாறு செய்யவேண்டும்.

  • மேலும் ஆடுகளை கூர்மையான பொருட்களுக்கு அருகில் செல்ல அனுமதிக்கக்கூடாது

  • எந்த ஒரு பண்ணை மேலாண்மை முறைகளைப் பின்பற்றும் போதும், அறுவை சிகிச்சையின் போதும் முறையான சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும்

  • கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் போது, டெட்டனஸ் நோய் வராமல் இருக்க முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க...

கால்நடைகளுக்கு கோடை கால தீவனப் பற்றாக்குறையைப் போக்க மர இலைகள்! கால்நடை மருத்துவர் யோசனை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

English Summary: Cataracts - Simple Ways to Prevent! Published on: 08 July 2021, 06:58 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.