கால்நடை விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட ஒருங்கிணைந்த மீன் உடனான பசு வளர்ப்பு பெருமளவில் உதவி செய்கிறது.
அத்தகைய மீனுடனான பசு வளர்ப்பு நெடுங்காலமாக நம் நாட்டில் செயல்முறையில் உள்ளது. இவை மீன் உடனான பசு வளர்ப்பை ஒருங்கிணைக்கும் ஒரு பொதுவான ஒருங்கிணைப்பு வடிவமாகும்.
பசுவளர்ப்பு அதிக அளவு உரத்தை சேமிக்கவும், மீனின் உணவு பயன்பாட்டை பூர்த்தி செய்யவும் மற்றும் பால் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் வித்திடுகிறது.
இவ்வகை யுக்தியைக் கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு மீன் விவசாயி பணத்தை மட்டும் ஈட்டுவதில்லை மாறாக பால், மீன் மற்றும் மாடு இறைச்சி ஆகியவற்றையும் விநியோகிக்கிறார்.
குள மேலாண்மை செயல்முறைகள்
பசுவின் சாணமானது மீன்களின் வளா்ச்சிக்கு பக்குவமான உரமாக பயன்படுகிறது. இதன் காரணமாகவே, சராசரியாக 5000 முதல் 10,000 கி.கி என்ற அளவில் 1 ஹெக்டேருக்கு தகுந்த இடைவெளியில் குளத்திற்கு அளிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் பசு மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்யும் போது கிடைக்கும் சாணம் கலந்த கழிவு நீர், சிறுநீர், பயன்படுத்தப்படாத மீதமான உணவு பொருட்கள் ஆகியவற்றைக் குளத்தில் சேர்த்து விடலாம்.
அவ்வாறு போடப்படும் மாட்டுச் சாணமானது மிதவைகள் வளர்ச்சியை பன்மடங்கு ஊக்குவிக்கிறது. அதேநேரத்தில் மீனுக்கு உணவாகவும் பயன்படுகிறது.
கால்நடை வளர்ப்பு முறைகள்
-
ஒருங்கிணைந்த மீன் உடனான பசு வளர்ப்புக்கு, மாட்டுக் கொட்டகையை மீன்குளத்தின் அருகிலோ அல்லது அதன் கரையோரப் பகுதியிலோக் கட்ட வேண்டும்.
-
உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மாட்டுக் கொட்டகையைக் கட்டலாம்.
-
தரையானது சிமெண்டினால் பூசப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
-
மாட்டுக் கொட்டகையின் கழிவுகள் மீன்குளத்தை அடையும் வண்ணம் அதன் வெளிபுறகுழாய் (அ) கால்வாய் குளத்துடன் இணைக்க வேண்டும்.
இத்தகைய செயல்பாட்டின் மூலம் விவசாயிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க முடியும்.
மேலும் படிக்க...
விவசாயத்தில் இரட்டை லாபம் ஈட்ட வேண்டுமா? வேளாண்மை மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்!
சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!
Share your comments