திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள முள்ளிப்புரம் பகுதியில் வரும் திங்கள்கிழமை காங்கேயம் கால்நடைத் திருவிழா நடைபெறவுள்ளது. இதில் சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இது குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி கூறியதாவது:
திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து காங்கேயம் கால்நடைத் திருவிழாவை வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 15) முள்ளிபுரத்தில் நடத்துகின்றன.
இயற்கை மீதும், பாரம்பரியக் கால்நடைகள் மீதும் ஆரம்பம் முதலே மிகுந்த ஈடுபாடு கொண்டு அவற்றைப் பேணிப் பாதுகாத்து வருகிறோம்.
மீட்பு முயற்சி (Recovery attempt)
அந்த வகையில் அழிவின் விளிம்பில் இருந்த காங்கேயம் இனக் கால்நடைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை தொடங்கி காங்கேயம் காளைகளைப் பாதுகாத்து வருகிறோம். அதன் எண்ணிக்கையை அதிகரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
பாரம்பரிய கால்நடைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக காங்கேயம் கால்நடைத் திருவிழா-2021 என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
சிறந்த காளைகளுக்குப் பரிசுகள் (Prizes for the best bulls)
சிறந்த காளைகளுக்கு 13 பிரிவுகளில் முதல் 4 இடங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதில் பெரிய பூச்சிக் காளைகள், எருதுகள், மயிலை மாடுகள், செவலை மாடுகள், காரி மாடுகள், இதேபோல 4 பற்கள் வரை என்ற வகைப்பாட்டிலும், பல் போடாத என்ற வகைப்பாட்டிலும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!
அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை-கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
Share your comments