1. கால்நடை

பால் கறக்க மறுத்த காளைமாடு- போலீஸில் புகார் அளித்த விவசாயி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cow who refused to milk - the owner who complained to the police!
Credit : Dailythanthi

நம்மூரில் கிணற்றைக் காணவில்லை எனப் போலீஸில் புகார் அளித்ததைப் போல, மத்தியப்பிரதேசத்தில் விவசாயி ஒருவர், வித்தியாசமான புகார் அளித்திருப்பது, அனைவரையும் வேடிக்கையில் ஆழ்த்தியுள்ளது.

கால்நடை விவசாயி (Livestock farmer)

மத்திய பிரதேச மாநிலத்தில் பிந்த் மாவட்டத்தில் உள்ள நயாகான் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுலால் ஜாதவ். 45 வயதான இருக்கு விவசாயம்தான் வாழ்வாதாரம்.

பால் கறக்க மறுப்பு

இவருக்குச் சொந்தமாக ஒரு எருமை மாடு உள்ளது. இந்த மாடுக் கடந்த சில நாட்களாகப் பால் கறக்க விடுவதில்லை. இதனால் வேதனை அடைந்த ஜாதவ்ர், அங்குள்ள காவல் நிலையத்துக்கு சென்றார்.

அய்யா, என் மாடு நாலஞ்சு நாளா பால் கறக்க விட மாட்டேங்குது. யாரோ சூனியம் வச்சுட்டாங்க, அதான் மாடு பால் கறக்க விட மாட்டேங்குது ஊரே சொல்லுது. இந்தப் பிரச்சினையை நீங்கதான் தீர்த்து வைக்கணும்” என்று புகார் செய்தார்.இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

மாட்டுடன் காவல்நிலையம்

இவர் புகார் கொடுத்து 4 மணி நேரம் ஆன நிலையில், போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையே என கருதினார் ஜாதவ். இந்த முறை தம் மாட்டையும் பிடித்துக்கொண்டு நேராக காவல் நிலையத்துக்கு போனார்.  இதோ என் மாட்டையேக் கூட்டிவந்துவிட்டேன். என் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லுங்க என்று அங்கிருந்த பொறுப்பு அதிகாரியிடம் முறையிட்டார்.

பணிந்தது காளைமாடு

இதையடுத்து காவல் துணை ஆய்வாளர் அரவிந்த் ஷா, கால்நடை மருத்துவர் ஒருவரை கொண்டு அந்த கிராமவாசிக்கு உதவுமாறு அந்தக் காவல்நிலைய அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலதிகாரி உத்தரவுக்கு இணங்க அவரும் உடனே நடவடிக்கை எடுத்தார்.

கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? மருத்துவர் கேட்டுக்கொண்டதும் அந்த மாடு பால் கறக்க அனுமதிக்கிறது. கலிகாலத்தில் எதுவும் நடக்கலாம் போலும்.

மேலும் படிக்க...

மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க ஆடு வளர்ப்பு! 90% வரை அரசாங்கம் மானியம்

மீன் வளர்ப்பு மூலம் அதிகம் லாபம் பெற 5 சிறந்த டிப்ஸ்!

English Summary: Cow who refused to milk - the owner who complained to the police! Published on: 15 November 2021, 10:32 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.