1. கால்நடை

கோழிப் பண்ணையில் கிருமி நாசினி தெளிக்கும் வழிமுறை !

R. Balakrishnan
R. Balakrishnan

இலாபகரமான கோழிப்பண்ணை அமைக்க சரியான திட்டமிடல், பண்ணை பதிவேடுகள் மிக அவசியம். தொகுதி முறையில் வளர்க்கப்படும் பண்ணைகளில் கோழிகளை விற்பனை செய்தபின் கிருமிநாசினி (Gems Killer) தெளிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

கிருமிநாசினி தெளிக்கும் வழிமுறை

  • பண்ணையில் உள்ள கோழிகளை வெளியேற்றியவுடன் பண்ணையின் உட்புறத்தில் சிலந்தி பூச்சிகள், கரையான், மற்றும் கரப்பான்பூச்சிகளின் கூடு அவற்றின் எச்சங்களை நீக்க வேண்டும்.

  • பரிந்துரைக்கபட்ட பூச்சி நாசினியினை தெளிக்க வேண்டும்.

  • பார்மல்டீஹைடு புகைமூட்டம் தூய்மை செய்வதற்கு முன்னும் பூச்சிநாசினியை 2வது முறையாக தெளிக்க வேண்டும்.

  • எல்லா உபகரணங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

  • தானியங்கி தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரங்களை மேலே கட்டி தொங்க விட வேண்டும்.

  • கோழி எச்சங்களை பண்ணையிலிருந்து குறைந்தது 2 கி.மீ. தொலைவில் கொண்டு சென்று அரசு விதிகளின் படி அழிக்க வேண்டும்.

  • தண்ணீர், தீவன உபகரணங்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்து உலற வைக்க வேண்டும்.

  • பூஞ்சைகள் தொற்று இருக்கக்கூடாது. தண்ணீர் குழாய்களில் வளரும் கிருமிகளை நீக்க அவற்றை ஒவ்வொரு முறை கோழிகளை எடுத்த பின்பும் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்ய முடியாவிடில் அதிக அளவில் குளோரினை (140 பிபிஎம்) பயன்படுத்த வேண்டும்.

  • அந்த நீரை வெளியேற்றி கோழி கூட்டம் வருவதற்கு முன் சுத்தமான நீரை குழாயினுள் செலுத்த வேண்டும். பெரிய தீவன தொட்டிகள், இணைப்பு குழாய்களை சுத்தம் செய்து எல்லா துவாரங்களையும் மூட வேண்டும்.

  • தேவையான இடங்களில் புகையூட்டி சுத்தம் செய்யலாம்.

  • குறிப்பிட்ட கோழிகளை தாக்ககூடிய நுண்ணுயிரிகளை அழிக்கும் சரியான கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்.

  • எல்லா வகையான கிருமி நாசினிகளும் ரத்த கழிச்சல் ஏற்படுத்தும் முட்டைகளை அழிக்காது. பயிற்சி பெற்ற பணியாளர்களை கொண்டு அழிக்க வேண்டும்.

  • கிருமிநாசினியை பயன்படுத்தும் போது உடனுக்குடன் புகையூட்ட வேண்டும். தரை ஈரப்பதமாகவும் கோழிப்பண்ணை அதிகபட்சமாக 65 சதவீதம் கொண்ட வெப்பநிலை இருக்கும் இடங்களில் புகையூட்டி சுத்தம் செய்தல் வேண்டும்.

  • கோழிகள் திரும்பி வரும்முன் பண்ணையில் உள்ள காற்றில் பார்மலின் அளவு 2 (பிபிஎம்) ஆக குறைந்து காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும். தரையில் ஆல்கூலம் பரப்பிய பின் மறுமுறை புகையூட்ட வேண்டும்.

  • பண்ணையில் வெளிப்புற பகுதியை சுத்தம் செய்ய மறக்கக்கூடாது. பண்ணையைச் சுற்றி கான்கிரிட்டால் அல்லது கூழாங்கற்களால் ஆன பகுதிகளை அமைக்க வேண்டும்.

  • அவை பக்கவாட்டில் 3-10 அடி உயரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத இடங்கள், புற்கள் மற்றும் இயந்திரங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.

  • மேலும் அவை சமமான, நீரோட்ட வசதியுள்ள தரையாக இருக்க வேண்டும்.

பார்த்திபன்,
கால்நடை டாக்டர் கோழியின துறை,
விருதுநகர்
95979 27728

மேலும் படிக்க

தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்க கால்நடைகளுக்கான ஊறுகாய்ப் புல் தயாரிப்பது எப்படி?
முதன்முறையாக கால்நடைகளுக்கான எரிவாயு தகன மேடை: சென்னையில் திறப்பு!

English Summary: Disinfectant spraying method in poultry farms

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.