சோயாப் புண்ணாக்கு விலை இருமடங்கு உயர்வால், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோழிப்பண்ணைகள் (Poultry farms)
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வாரந்தோறும், 10 லட்சம் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
முக்கியத் தீவனம் (Main fodder)
அவ்வாறு இங்கு உற்பத்தியாகும் கோழிகளுக்கு சோயாப் புண்ணாக்குதான் முக்கிய தீவனம்.
எனவே இப்பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள், கிலோக்கணக்கில் சோயாப் புண்ணாக்கை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு, கோழிகளுக்கு இரையாக வழங்குவது வழக்கம்.
விலை உயர்வு (increase in price)
ஆனால் தற்போது சோயாப் புண்ணாக்கின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், கோழிப்பண்ணையாளர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டியத் தவிப்பில் உள்ளனர்.
உற்பத்தியாளர்கள் பாதிப்பு (Vulnerability of manufacturers)
இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறுகையில்,
கடந்த ஜனவரி மாதம் கிலோ, ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்ட இருந்த சோயா புண்ணாக்கு தற்போது, ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. இதரத் தீவனங்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் தீவனத்தின் உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கைத் தேவை. எனவே தீவனங்களின் விலை உயர்வால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோழி விலை உயரும் (Poultry prices will rise)
தீவனங்களை விலை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதால், வரும் நாட்களில் கோழிகளின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
அரசின் இலவச வெள்ளாடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!
Share your comments