விவசாயி ஒருவர் வளர்த்துவரும் கோழி, முந்திரி வடிவில் முட்டை இடுவது மற்றவர்களையும், கால்நடை ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
முட்டையில் பல வகைகள் உண்டு. பல ரகங்கள் உண்டு. ஆனால் உடல்நலத்திற்கு உத்திரவாதம் அளிப்பது என எடுத்துக்கொண்டால், அதில் கோழி முட்டையின் பங்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட கோழி முட்டையின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது? அப்படியொரு விசித்திரம் இங்கு நிகழ்ந்திருக்கிறது.
வியப்பில் மக்கள்
கர்நாடகாவில் உள்ள பெல்தங்கடி தாலுகாவின் லைலா அருகே முந்திரி வடிவ கோழி முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள லைலாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த், இவருக்குச் சொந்தமான கோழிதான் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், வித்தியாசமான வடிவத்தில் முட்டைகளை இட்டுவருகிறது.
இந்த முட்டைகள், நாம் சாப்பிடும், முந்திரியை ஒத்த வடிவத்தில் உள்ளன. பார்ப்பதற்கு வியப்பாகக் காணப்படுகிறது. முந்திரி வடிவிலான இந்த முட்டையை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
கோளாறு
முதல் ஓரிரு நாட்களில், முட்டையின் வடிவத்தைப் பார்த்து அச்சமடைந்த விவசாயி, உடனடியாக கால்நடை மருத்துவரிடம் கொண்டுசென்று விசாரித்தார்.அதற்கு, இந்தக் கோழியில் வயிற்றில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என கால்நடை மருத்துவர் பதில் அளித்தார். ஆனால் தொடர்ச்சியாக அதேபோல் முந்திரி வடிவ முட்டைகளைக் கோழி இட்டுவருகிறது.
எனவே இந்த முட்டையின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றம் ஏன்? இந்த முட்டையைச் சாப்பிடுவதால், உடல் ரீதியான பாதிப்பு ஏதும் ஏற்படுமா? என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க...
Share your comments