1. கால்நடை

கோடையில் கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்க அருமையான நாட்டு மருந்து!

R. Balakrishnan
R. Balakrishnan
Chicken
Credit : Vikaspedia

நாட்டுக்கோழிகள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) உடையவை. பருவநிலை மாற்றங்களால் அவை நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கோடையில் வெள்ளை கழிச்சல் நோய் பெரிய சவாலாக இருக்கும். இதனால் கோழிகளின் குடலும் நரம்பும் பாதிக்கப்படும். ஒருகோழி பாதிக்கப்பட்டால் பண்ணையில் 50 சதவீத கோழிகளை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும்.

தடுப்பு மருந்து

கோழிக்குஞ்சுகள் பிறந்த 7 நாட்களுக்குள் ஆர்.டி.வி.எப். சொட்டுமருந்தை கண்ணில் விட வேண்டும். 21ம் நாளில் லசோட்டா மருந்தை வாயில் ஊற்ற வேண்டும். எட்டு வார குஞ்சுகளுக்கு ஆர்.வி.வி.கே தடுப்பு மருந்தை இறக்கையில் செலுத்த வேண்டும். அரசு கால்நடை நிலையங்களில் சனிக்கிழமை தோறும் இலவசமாக தடுப்பூசி (Free Vqccine) போடப்படுகிறது. இது வருமுன் காக்கும் தடுப்பு முறைகள்.

வெள்ளை கழிச்சலுக்கு நாட்டு மருந்து

5 லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் மஞ்சள் துாள் கலந்து கொடுத்தால் கோழிகளின் நோய் எதிர்ப்புத்திறன் (Immunity Power) கூடும். கழிச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு 10 கிராம் சீரகம், 50 கிராம் கீழாநெல்லியை இடித்து சிறு உருண்டையாக்கி தரலாம். ஒரு மணிக்கு ஒரு முறை சிறு உருண்டை வீதம் 5 நாட்கள் வரை தரலாம். இந்த அளவு பத்து கோழிகளுக்கு சரியாக வரும்.

கோழி அம்மை

மற்றொரு நோய் கோழி அம்மை. குஞ்சுகளை அதிகம் தாக்கும். பிறந்த 3வது வாரத்தில் தடுப்பூசி போட வேண்டும். அம்மை நோயால் குஞ்சுகள் பாதிக்கப்பட்டால் 10 துளசி இலை, 10 வேப்பிலை, 5 பல் பூண்டு, 5 கிராம் மிளகு, 10 கிராம் சீரகம், 5 கிராம் மஞ்சள் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக்கி ஏழு நாட்கள் தர வேண்டும். கோழிகளாக இருந்தால் பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம், துளசி, வேப்பிலை, சூடம் தலா 50 கிராம், 20 கிராம் சீரகம் ஆகியவற்றை அரைத்து கொப்புளங்கள் மீது பூச வேண்டும். இதனுடன் சிறிது வேப்பெண்ணெய் சேர்க்கலாம்.

சோற்று கற்றாழையை துண்டுகளாக நறுக்கி வாரம் இருமுறை உணவாக தந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் சீரகத்தை கொதிக்க வைத்து தரலாம். கீழாநெல்லி இலைகளை வேருடன் வெட்டி காய்ச்சி குடிநீருடன் தருவது நல்லது.

- ராஜேந்திரன்
இணை இயக்குனர் ஓய்வு கால்நடை பராமரிப்பு துறை திண்டுக்கல்
73580 98090

மேலும் படிக்க

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

English Summary: Fantastic medicine to protect chickens from diseases in summer! Published on: 28 April 2021, 05:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.