விவசாயத்தின் ஆதரவுத்தொழிலாகக் கருதப்படும் கால்நடை வளர்ப்பில் முக்கியமானது ஆடுகள் பராமரிப்பு. அதிலும் அவற்றை மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
ஆட்டுக்குட்டிகள் பராமரிப்பு (Care of lambs)
கொளுக்கட்டை புல், ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவனப் பயிர்களை அளிக்கலாம்.
தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம். ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
பிறந்த குட்டிகளுக்கான தீவன மேலாண்மை (Feed management for newborns)
சீம்பால்
சீம்பால் முதல் மூன்று நாட்களுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். சீம்பால் ஒரு நாளைக்கு 100 மில்லி ஒரு கிலோ எடைக்கு என்ற அளவில் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் (Mother`s Milk)
ஒரு நாளைக்கு 0.7 - 0.9 லி தாய்ப்பால் ( அ ) புட்டிப்பால் முதல் இரு வாரத்திற்கு 3 - 5 முறை கொடுக்க வேண்டும்.
பால் அருந்த அனுமதி (Permission to drink milk)
-
3 வாரத்திற்கு மேல் பால் மறக்கடிக்கப்படும் காலம் ( 3 மாதம் வரை) காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் மட்டும் பால் அருந்த அனுமதிக்க வேண்டும்.
-
மூன்று குட்டிகள் இருப்பின் இரண்டு குட்டிகள் பாலருந்திய பின் மூன்றாவது குட்டியை பால் குடிக்க அனுமதிக்க வேண்டும்.
-
தேவை ஏற்படும் பட்சத்தில் பாலைக் கறந்து புட்டி மூலமாகவோ பாத்திரத்திலோ பால் குடிக்கப் பழக்கி விடலாம்.
3 - 4 வாரங்களில் ஆரம்ப கால குட்டிக்குத் தீவனத்தைக் கொடுத்துப் பழக்க வேண்டும். இந்த அளவை சிறிது சிறிதாக அதிகரிக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியது (To be avoided)
செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு ஏற்படாதவாறு கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். இளம் புல், தளிர் இலைகளை 3 - 4 வாரம் முதல் அளிக்கத் தொடங்கலாம். உண்ணப் பழகியவுடன் அதன் அளவை சிறிது சிறிதாக அதிகரிக்கலாம். மூன்று மாத வயதில் பால் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.
வளரும் பருவக் குட்டிகளுக்கான தீவன மேலாண்மை(Feed management for growing pups)
3 முதல் 4 மாத வயது வரை வேலிமசால் , கினியாபுல், கோ -4, அகத்தி போன்ற பசுந்தீவனங்களை நாளொன்றிற்கு ஒரு கிலோ வீதம் கொடுக்கலாம். பின்னர் அளவினை அதிகரித்து 6 மாத வயது வரை 2 கிலோ வீதம் அளிக்கலாம். 6 - 9 மாதம் வரை 3 கிலோ வீதம் அளிக்கலாம்.
அடர் தீவனம் (Concentrated fodder)
அடர் தீவனம் நாளொன்றிற்கு 3 - 4 மாதம் வரை 50 கிராம் , 5 - 6 மாதத்தில் - 100 கிராம் , 7-9 மாதத்தில் 200 கிராம் வீதம் அளிக்கலாம்.
பருவமடைந்த பெட்டை ஆடுகளுக்கு (For mature pack goats)
-
பத்து மாதம் முதல் ஒரு வருட வயதில் பெட்டை ஆடுகள் பருவமடைகின்றன . இப்பருவத்தில் இனவிருத்திக்கென தேர்வு செய்து பெட்டைகளைப் பிரித்து தீவனம் அளிக்க வேண்டும்.
-
பருவ காலம் தொடங்குவதற்கு முன் கூடுதலான ஊட்டச்சத்துத் தீவனங்களைக் கொடுப்பதால் பருவ அறிகுறிகள், கருத்தரிக்கும் தன்மை போன்றவை சிறப்பாக வெளிப்பட்டு இரட்டை குட்டிகள் போடும் சதவீதமும் அதிகரிக்கிறது. இதனைச் செழுமைப் படுத்துதல் எனக் கூறப்படுகிறது.
-
நாளொன்றிற்குப் பசுந்தீவனம் 3 முதல் 4 கிலோ, உலர் தீவனம் 1 கிலோ, அடர் தீவனம் 250 கிராம் என்ற அளவில் அளித்து செழுமைப்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க...
சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை!
கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்
பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!
Share your comments