1. கால்நடை

மீன் வளம்: மீன் பிடிப்பு கலன்கள்( இயந்திர படகுகள், இயந்திரமற்ற படகுகள்)

KJ Staff
KJ Staff

மீன் பிடிப்பு கலன்கள்

பெரிய அளவில் மீன்பிடிக்க மிகவும் முக்கியமானவை மீன்பிடிப்பு கலன்கள். கடல் மற்றும் நன்னீர் மீன்பிடிப்பிற்கு பெரிய வகையான மீன் பிடிப்பு படகுகள் வடிவமைத்துள்ளனர். இந்தியாவில் இரண்டு வகையான மீன் பிடிப்பு கலன்கள் உள்ளன. இயந்திரம் மற்றும் இயந்திரமில்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.

இயந்திரமற்ற படகுகள்

கட்டுமரம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரமற்ற படகுகள் ஆகும்.

கட்டுமரம்

இது ஒரு எளிமையான மீன்பிடிப்பு கலனாகும். சில வளைவு மரத்துண்டுகளை இணைத்து கட்டுமரமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதை கிழக்கு கடற்கரை பகுதிகளில் உபயோகிக்கின்றனர். இந்தியாவில் நான்கு வகையான கட்டுமரம் உள்ளது. ஒரிசா வகை, ஆந்திரா வகை, கோரமண்டல் வகை மற்றும் கன்னியாகுமரி வகை கட்டுமரம்.

கடல்தோண்டி தோணி

இதும் ஒரு எளிமையான மீன்பிடிப்பு தோணி வகை. இதை வைத்து கடற்கரை அருகில் இருக்கின்ற மீன்களை பிடிக்க உதவும். சிறு அளவுடைய தோணி மரபலகையினால் செய்யப்பட்டது.

இந்தியாவின் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் ஓடம், தோணி, வன்சியஸ் ஆகியவற்றை மீன் பிடிக்க பயன்படுத்துகின்றனர்.

மரப்பலகை தோணி

இது பெரிய வகையான தோண்டி தோணி, மரப்பலகையினால் ஆனது. கேரளாவில் பயன்படுத்துகின்றனர்.

மசுலா படகு

மசுலா படகு ஆந்திராவில் அதிகம் உள்ளது. பாய்மரத்தை தென்னை நாரால் ஆன கயிறு மூலம் இணைத்து பயன்படுத்துகின்றனர்.

திங்கி

செதுக்கிய படகுகளை திங்கி என்பர். இது பல விதமாக மீன்பிடிக்க பயன்படும்.

வெளிமரத்தோணி

மரப்பலகையுடன் வெளியே ஒரு மரதோணியை இணைத்தால் வெளிமரத்தோணி. இது ரம்பணி படகு போன்றது. கர்நாடகாவில் பயன்படுத்துகின்றனர்.

இயந்திர படகுகள்

மீன் பிடிக்க சிறு அல்லது நடுத்தர (10-15 மி.நீளம்) படகுகளில் இயந்திரம் மூலம் தொலைவான இடங்களுக்கு சென்று மீன்பிடிக்கின்றனர். தூண்டில் படகு,பொறி படகு, செவுள் வலை, விசை மீன்பிடிப்பு கலன் ஆகியவை இயந்திர படகுகளாகும்.

கை தூண்டில் படகு

கைத்தூண்டில் படகு கடல் ஆழமில்லாத மற்றும் ஆழமுள்ள இடங்களில் உபயோகிக்கலாம். இந்திய மீன்பிடிப்பு படகில் கொக்கியுடன் 0.5மி.மீ-1மி.மீ அளவில் அமிழ்கட்டையில் ஒரு சிறு கல்லை கட்டி இயந்திரம் மூலம் இயக்குவார்கள். இந்த படகில் அனைத்து மீன்களையும் பிடிக்கலாம்.

கழி மூலம் மீன் பிடிப்பு

படகில் கழிகளை இணைத்து படகு தளத்தின் மேல் கலன்களை சேர்த்து அட்டியை முன்பகுதியில் அம்பு வடிவத்தில் கழிகளை வைத்து மீன் பிடிப்பார்கள். இந்தியாவில் இதை ‘மஸ் ஒடி’ என்பார்கள்.

செவுள் வலை

செவுள் வலைக்கு ஏற்றவாறு கலன் அளவை பயன்படுத்தலாம். வலையின் எண்ணிக்கை கலன் அளவை பொருத்தே அமையும். படகின் முகப்பு முதல் அட்டி வரை உள்ள மீன்பிடிப்பு கலன்கள் ஒரு கூட்ட மீன்களை பிடிக்கலாம். இதில் இயந்திர அரை உள்ளது. படகில் செவுள் வலை வைக்க பின்புறம் இடம் அமைந்துள்ளது. படகு முழுவதும் இயந்திரம் மூலம் இயக்கப்படும்.

தகவல்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்களம் ,மீன்வளம்

English Summary: fishing vessels: fisheries:types of fishing vessels:mechanical boats, unmanned boats Published on: 08 May 2019, 05:37 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.