கால்நடைத் துறையில் 1,154 மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவாா்கள் என கால்நடை துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். மேலும், எழை எளிய விவசாய பெண்களுக்காக வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த கால்நடை துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 250 கால்நடை கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் கால்நடைத் துறையில் 3 மருத்துவக் கல்லூரிகள், ஒரு ஆராய்ச்சி நிலையம் மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா சேலத்தில் தொடங்குவதற்கு கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பா் மாதத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் கால்நடை பராமரிப்புத்துறையில் தமிழகம் முழுவதும் 1,154 கால்நடை மருத்துவர்கள் பணி நியமனம் செய்வதற்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்காக 15 ஆயிரத்து 577 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இதற்கான மாணவ-மாணவிகள் தரவரிசை பட்டியல்கள் தயார் நிலையில் உள்ளன. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் வீதம் 6 லட்சம் வெள்ளாடுகளும், 2 லட்சத்து 40 ஆயிரம் பெண்களுக்கு நாட்டுக்கோழியும், 15 ஆயிரம் பெண்களுக்கு கறவைப்பசுக்களும் வழங்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன என்றார்.
மேலும் படிக்க...
தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!
பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும் - விவரம் உள்ளே!!
Share your comments