1. கால்நடை

ஆர்கானிக் முட்டை உற்பத்தி- மூலிகை இலைகள் மூலம் அதிகரிக்கலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to increase egg production in chickens?

நம் மக்களுக்கு எப்போதுமே கோழிகளின் பக்கம் தனி ஈர்ப்பு உள்ளது. ஆட்டுக்கறி சாப்பிடுவதால், உடலில் கொழுப்பு சேரும், கொலஸ்ட்ரால் என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதன் விலையும் அதிகம் என்பதால், சிக்கன் (Chicken) என்பதே பலரது விருப்பமான அசைவ உணவாக உள்ளது.

கோழிவளர்ப்பில்  ஆர்வம் (Interested in poultry)

இதனைக் கருத்தில் கொண்டு,கிராம மக்கள் மட்டுமல்ல, நகரவாசிகளும் தற்போது கோழிவளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

180 முட்டைகள் (180 Eggs)

ஏனெனில் , ஒரு மனிதன் ஆண்டு ஒன்றுக்கு 180 முட்டைகள் சாப்பிட வேண்டும் என்கிறது மருத்துவ ஆராய்ச்சிகள்.எனவே இறைச்சிக்காகக் கோழிகள் வளர்க்கப்பட்டாலும், முட்டை என்பது இறைச்சியைக் காட்டிலும் மலிவான நிலை என்பதால், உடல் நலத்திற்காக பெரும்பாலானோர் தவறாமல் வாங்கி சாப்பிடுகின்றனர்.

அதிக லாபம் (more profit)

எனவே முட்டை வியாபாரம் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால், முட்டை உற்பத்தியை அதிகரிக்க கோழி வளர்ப்பில் பல்வேறு யுக்திகளைக் கையாளுகின்றனர்.

கோழிகளுக்கு பல்வேறு சத்துக்களைக் கொடுப்பதற்காக பல ஆயிரங்களை செலவிட நேர்கிறது.இதற்கு மாறாக, இயற்கை மூலிகைகளைக் கொண்டும், முட்டையின் உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரிக்க முடியும். அந்த மூலிகைகள் எவை என்பதைப் பார்ப்போம்.

பப்பாளி இலைகள் (Papaya leaves)

முட்டை உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கியமானது பப்பாளி இலைகள். இதில் ஏராளமான தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆக்டினோஜென் (actinogen )நிறைந்த பப்பாளி இலைகளை உணவாக அளிப்பது, முட்டை உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், சோர்வு, வீக்கம் மற்றும் கால்களில் பலவீனம் போன்ற பல பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

கொத்தமல்லி இலைகள் (Coriander leaves)

கொத்தமல்லி இலைகளும் முட்டை உற்பத்தியை அதிகரிக்க வல்லவை. இதளை அதிகளவில் கோழிகளுக்கு தந்து பயன் பெறலாம்.

முருங்கை இலைகள் (Drumstick leaves)

முருங்கை இலைகளில் புரதம், இரும்பு, பொட்டாசியம் நிறைந்தவை. மேலும், இதில் இடம்பெற்றுள்ளன.இந்த இலைகளில் antioxidants, flavonoids மற்றும் A மற்றும் C ஆகியவை நிறைந்துள்ளன. இவற்றை கோழிகளின் உணவாக அளிப்பது இறகுகளின் நிறம் மற்றும் வளர்ச்சியைத் தூண்டுகிறது.


பட்டாணி இலைகள் (Pea Leaves)

தோட்ட பட்டாணி இலை அல்லது பட்டாணி இலைகளைக் கோழிகளின் உணவில் சேர்ப்பது முட்டை உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும். அதாவது வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது கோழிகளுக்கு உணவளிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

சாயமன்சா (Chayamansa )

சாயமன்சா இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. இதனைக் கோழிகளுக்கு உணவக அளிப்பது கோழிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதுவதுட, நல்ல முட்டை உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. மேலும் தாதுக்களின் களஞ்சியமான சாயமன்சா , அனைத்து முட்டைகளும் குஞ்சு பொரிக்க உதவுவதுடன, ஆரோக்கியமான குஞ்சுகள் பிறக்கவும் வழிவகுக்கும். இதைத்தவிர, கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

தண்ணீரும் அவசியம் (Water is also essential)

கோழிகளுக்கு தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சத்தான உணவு கொடுக்கப்பட வேண்டும். இலை காய்கறிகள் போன்ற சத்தான ஊட்டங்களுடன் கோழிகளுக்கு உணவளிப்பது முட்டை உற்பத்தியை சாதகமான முறையில் அதிகரிக்கும்.
சத்தான உணவைத் தவிர, கோழிகளுக்கு நன்கு அளிக்கவேண்டும். தண்ணீரைப் போலவே உணவும் அவசியம்.

மேலும் படிக்க...

சுட்டெரிக்கும் சூரியன்- கால்நடைகளைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

English Summary: How to increase egg production in chickens? Published on: 21 March 2021, 10:23 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.