புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்த திறன் மேம்பாடு மற்றும் செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தேனீ வளர்ப்பு பயிற்சியாளர்கள் குணசேகரன் மற்றும் மாரியம்மாள் இருவரும் தேனீ வளர்ப்பு குறித்த தகவல்கள் மற்றும் களப் பயிற்சிகளை, செய்முறைகளாக மாணவர்களுக்கு வழங்கினர்.அதேபோல் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தையும் தேனீ வளர்ப்புக்கான பண்ணைகள் அமைத்தால் அதன் மூலம் பயிர்களுக்கு மகரந்த சேர்க்கை அதிகரித்து மகசூல் அதிகமாக கிடைக்கும் என்ற ரகசியத்தையும் மாணவர்களிடையே பகிர்ந்தனர்.
தேனி மற்றும் அதன் சார்பு பொருட்கள் மூலம் அதிக லாபம் பெறும் வழிகளும் செயல்முறை மூலம் எடுத்துரைக்கப்பட்டது. மிகவும் ஆர்வத்துடன் இந்த செய்முறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியை மாணவர்கள் கவனித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் சே.நக்கீரன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். இந்த செயல்முறை நிகழ்ச்சி மாணவ மாணவிகளிடையே தொழில் முனைவோர் ஆகும் எண்ணத்தை ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது என அதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க:
Share your comments