இந்தியாவின் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (NDRI) விஞ்ஞானிகள் நாட்டின் முதல் கிர் ரக பசுங்கன்றுவை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த கன்று மார்ச் 16 அன்று பிறந்தது, தற்போது இந்த பெண் கன்றுக்கு கங்கா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குளோனிங் பசுங்கன்று
குளோனிங் முறையில் பிறக்கும் போது பசுங்ன்றின் எடை 32 கிலோவாக இருந்தது. ஆனால், இப்போது இந்த கன்று நல்ல உடல்நலத்துடன் வளர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். கிர் மற்றும் சாஹிவால் ஆகிய இரு மாட்டினங்களை குளோனிங் செய்து இந்த பசுங்கன்றை, தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனம் 2009 இல் உலகின் முதல் குளோனிங் செய்யப்பட்ட எருமையையும் ஏற்கனவே உருவாக்கி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குளோனிங் செயல்முறை
குளோனிங் என்பது இயற்கையான அல்லது செயற்கையான வழிமுறைகள் மூலம் ஒரே மாதிரியான அல்லது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிஎன்ஏ கொண்ட தனிப்பட்ட உயிரினங்களை உருவாக்கும் செயல்முறையாகும்.
இயற்கையில், சில உயிரினங்கள் பாலின இனப்பெருக்கம் மூலம் குளோன்களை உருவாக்குகின்றன . பயோடெக்னாலஜி துறையில் , குளோனிங் என்பது செல்கள் மற்றும் டிஎன்ஏ துண்டுகள் ( மூலக்கூறு குளோனிங் ) ஆகியவற்றின் குளோன் செய்யப்பட்ட உயிரினங்களை (நகல்கள்) உருவாக்கும் செயல்முறையாகும் .
மேலும் படிக்க
மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு: கிராம மக்களின் சிறப்பான செயல்!
100 நாள் வேலைக்கான சம்பளம் உயர்வு: மத்திய அரசின் அசத்தலான அறிவிப்பு!
Share your comments