மாடுகளைத் தாக்கும் நோய்களில் அவற்றின் வயிறு மற்றும் குடல் சவ்வில் ஏற்படும் அழற்சி மிக முக்கியமானது.
தவறுதலாக விழுங்குதல் (Swallowing by mistake)
பொதுவாகக் கறவை மாடுகள் மேயும்போது கூர்மையான பொருட்களான ஆணி, கம்பி மற்றும் இதர இரும்பாலான பொருட்களைத் தவறுதலாக புற்களுடன் சேர்ந்து விழுங்கி விடும்போது, இந்நோய் ஏற்படுகிறது.
சவ்வைத் துளைக்கும் (Piercing the membrane)
இந்த கூர்மையான பொருட்கள் வயிற்றுக்குள் சென்றவுடன், ரெட்டிக்குளம் எனப்படும் மாடுகளின் இரண்டாம் வயிற்றுக்குள் சென்று அதனை துளைத்து குடலைச் சுற்றியுள்ள சவ்வைத் துளைத்துப் பின்பு இதயத்தையும் துளைத்து விடும்.
உயிர் பிழைப்பது கடினம் (Survival is difficult)
குறிப்பாக சினையுற்ற மாடுகள், சினையற்ற மாடுகளை விட இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் உயிர் பிழைப்பது கடினம்.
நோய்க்கான காரணங்கள் (Causes of the disease)
-
கூர்மையான இரும்புப் பொருட்களை தெரியாமல் மாடுகள் புற்களுடன் விழுங்கிவிடுவதால் இந்நோய் ஏற்படுகிறது.
-
வயிற்றுக்குள் செல்லும் இப்பொருட்கள் பின்பு இதர உறுப்புகளிலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
-
கூர்மையான இரும்புப் பொருட்களான ஆணிகள், கம்பிகள், ஹேர்பின்கள், துணி தைக்கப் பயன்படும் ஊசிகள், மற்ற இதர துளையிடும் ஊசிகள் தீவனத்தில் இருத்தல்.
-
கடினமான, கூர்மையுள்ள மேற்கூறிய பொருட்கள் தூக்கியெறியப்படும் மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்தல்.
நோய் அறிகுறிகள் (Symptoms of the disease)
-
காய்ச்சல்
-
தீவனம் உட்கொள்ளாமை
-
மாடுகளின் முதுகு வளைந்து, மடக்கிய முன்கால்களுடன் நிற்பது
-
இதயத்துடிப்பில் மாற்றம் காணப்படுதல்
-
கழுத்திலுள்ள ஜூகுலார் தமனியில் துடிப்பு காணப்படுதல்
-
நெஞ்சுப்பகுதியில் வீக்கம்
-
பால் உற்பத்தி குறைதல்
பரிசோதனைகள் (Experiments)
-
பாதிக்கப்பட்ட மாடுகளின் இரத்த நாளங்களில் கைகளால் அழுத்தம் கொடுக்கப்படும் போது கைகளுக்கு இரண்டு புறமும் இரத்தம் தேங்கிவிடும்.
-
ஆனால் நோய் பாதிப்பற்ற மாடுகளில் அழுத்தம் கொடுக்கப்படும் கையின் ஒரு புறம் மட்டுமே இரத்தம் தேங்கும்.
-
பாதிக்கப்பட்ட மாடுகளை சரிவான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு ஓட்டிச் செல்லும் போது அவை மெதுவாக நடப்பதுடன், நடப்பதற்கு சிரமப்படுவதில் இருந்து இந்த நோயை உறுதி செய்து கொள்ளலாம்.
நோய்த்தடுப்பு முறைகள்
-
எனவே மாடுகளின் தீவனத்தில் கூர்மையான இரும்புப்பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
-
மாடுகளின் கொட்டகை மற்றும் மேய்ச்சல் இடங்களில் மேற்கூறிய பொருட்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
-
கட்டிடம் கட்டப்படும் இடங்களில் மாடுகளைக் கட்டக்கூடாது.
-
வயல்களில் இரும்புப் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
-
காந்தம் இழுத்துவிடும்
-
அரைத்த தீவனத்தினை மாடுகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக தீவனத்தினை காந்தத்தின் மீது செலுத்தினால், அதில் ஏதேனும் இரும்புப் பொருட்கள் இருந்தால் காந்தம் இழுத்துவிடும்.
நோயின் ஆரம்ப காலத்தில் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு மாடுகளுக்குச் சிகிச்சை அளிக்கவேண்டும்.
-
நோய் முற்றிய நிலையில் இருந்தால் பாதிக்கப்பட்ட மாடுகள் பிழைப்பது கடினம்.
மேலும் படிக்க...
மாடு வாங்கவும் மானியம் வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை!
தினமும் 12 லிட்டர் பால் கொடுக்கும் திறன் கொண்ட எச்.எஃப் கலப்பின மாடு வளர்க்கலாம்.
Share your comments