ஆண்டுதோறும் பொங்கல் (Pongal) திருநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழாக்களைப் போல் களைகட்டும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியுள்ளதால், விதிமுறைகளுக்கு (Rules & Regulations) உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அனைவருக்கும் இன்ப செய்தியை அளித்தது. மற்றுமொரு இன்ப செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அது தான் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு (Insurance) வழங்கும் திட்டம்.
ஜல்லிக்கட்டு போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் வரும் 17ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி (Jallikattu Competition) நடைபெறுகிறது. அதற்கான தொடக்க நிகழ்ச்சியான கால்கோல் நடும் விழா, அம்மன் குளத்திடலில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர் (C. Vijaya baskar) கலந்துகொண்டு கால்கோல் நட்டு வைத்தார்.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு:
கொரோனா (Corona) காலக்கட்டத்தில் தமிழக அரசு மற்றும் பொது சுகாதார துறை கூறியிருக்கும் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு (Insurance) செய்யப்பட உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
காளை வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி:
விவசாயத்தில், பயர்களுக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டு விவசாயி நஷ்டமடைவதை தவிர்க்க பயிர்க் காப்பீடு (Crop Insurance) உள்ளது போல், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காப்பீடு விரைவில் வரும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதே இவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
காங்கேயம் இன மாடுகள் ரூ.18 லட்சத்துக்கு விற்பனை
மதுரையில் மானிய விலையில் ஆடு, மாடு, கோழிகளை வழங்கியது வேளாண் துறை!
Share your comments