காங்கயம் தாலூக்கா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை (Kangeyam cows market) தற்போது நடைபெற்று வருகிறது. இச்சந்தையில், காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். மாடுகளை வாங்க அதிகளவில் கூட்டம் கூடுவதால், விற்பனை களைகட்டும்.
மாடுகள் தரம் பிரிப்பு:
காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள் மயிலை பூச்சிகாளைகள், மயிலை மாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் ஆகிய காங்கேயம் இனங்களை மட்டும் விற்பனைக்காக (sales) கொண்டு வந்திருந்தனர். இதில் காங்கேயம் இன நாட்டு பசுமாடுகள், கன்றுகள், காளைகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த சந்தையில் நேற்று காங்கேயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் அதிக ஆர்வத்துடன் நேரில் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.
மாடுகளின் விலை:
நேற்றை சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக 85 கால்நடைகள் (Livestock) வந்திருந்தன. இதில் காங்கேயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.55ஆயிரம் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது, காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 45 கால்நடைகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் (Market Supervisors) தெரிவித்தனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மதுரையில் மானிய விலையில் ஆடு, மாடு, கோழிகளை வழங்கியது வேளாண் துறை!
ருசியான தரமான நாட்டுக்கோழி வளர்க்க வேண்டுமா? சில தகவல்கள் இங்கே!
Share your comments