கஞ்சா கருப்பு என்றுக் கேள்விப்பட்ட நமக்கு, கஞ்சா கோழி, அதாவது கஞ்சா சிக்கன் என்பது சற்று புதிராகத் தான் இருக்கிறது. ஆனால், உலகின் முக்கியமான சுற்றுலா நாடாக விளங்கும் தாய்லாந்தில் தற்போது கஞ்சா சிக்கன் என்ற ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தக் கஞ்சாசிக்கன் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா என உலகில் பல நாடுகளின் சந்தைக்கு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தாய்லாந்து வடக்குத் தாய்லாந்தில் மருத்துவத்திற்காகப் பயன்படுத்தும் கஞ்சா வளர்க்கும் பண்ணை ஒன்று, அதன் கோழிகளுக்கு ஆன்டிபயோடிக்-கிற்குப் பதிலாகக் கஞ்சா-வை உணவாக அளித்து வருகிறது. இந்தப் புதிய வகை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்தச் சோதனை நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்துள்ளது என்று கூறியுள்ளனர்.
இறப்பு குறைந்தது
சியாங் மாய்ப் பல்கலைக்கழகம் சியாங் மாய்ப் பல்கலைக்கழகத்தின் (Chiang Mai University) விலங்குகள் மற்றும் நீர்வாழ் அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள், ஜனவரி 2021 இல் கோழிகளின் உணவில் இந்தப் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து லம்பாங்கில் உள்ள பண்ணையில் உள்ள 1,000 கோழிகளில் 10% க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இறந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஒரு வருட ஆராய்ச்சி இப்பல்கலைக்கழகத்தின் ஆய்வின் கண்டுபிடிப்புகள் இன்னும் மதிப்பாய்வில் உள்ளன.
கஞ்சா உணவு
ஆய்வுக்குத் தலைமை தாங்கிய உதவி பேராசிரியர் சோம்புனட் லும்சங்குல், கஞ்சா தீவனம் கோழிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதில் முக்கியமாகச் செயல்படுகிறது. பறவைகளின் சிறப்பு உணவாகத் தீவனத்திலும் தண்ணீரிலும் நொறுக்கப்பட்ட கஞ்சாவைச் சேர்த்து கொடுக்கப்பட்டு உள்ளது, இதேபோல் இக்காலகட்டத்தில் கோழிகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) மற்றும் மருந்துகள் கொடுக்கப்படவில்லை.
ஆரோக்கியமான கோழிகளைத் தாண்டி ஆர்கானிக் கோழிகளை விரும்பும் நுகர்வோருக்கு மத்தியில் இக்கோழிகள் அதிக விலைக்கு எளிதாக விற்பனை செய்ய முடியும். கறிக்கோழிகளின் வழக்கமான விலையை விட இருமடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீண்ட காலச் சோதனை
இந்த ஆய்வு கோழி வளர்ப்பில் இருக்கும் மருந்து செலவுகளைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இயற்கையாகக் கிடைக்கும் மருத்துவக் கஞ்சா பயன்படுத்துவதால் பண்ணை உரிமையாளர்களுக்குப் பெரிய அளவிலான செலவுகள் குறையும். இந்த ஆய்வு நீண்ட காலச் சோதனையில் வெற்றி அடைந்தால் கோழி வளர்ப்பில் குறைவான செலவுடன் இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments