1. கால்நடை

கோழியினங்களுக்கான பாரம்பரிய மூலிகை முதலுதவி மருத்துவம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
medicinal plants for chicken

கால்நடைகளுக்கு நாம் மேற்கொள்ளும் சில எளிய பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகள் பாதுகாப்பான முதலுதவி மருந்தாக விளங்குகிறது. எனவே தான் இன்றும் இந்த மூலிகை மருத்துவங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதில் கோழியினங்களுக்கு மேற்கொள்ளப்படும் சில எளிய பாரம்பரிய மூலிகை மருத்துவங்கள் மற்றும் அதனை உட்கொள்ளும் விதம் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அளித்துள்ள வழிமுறைகள் குறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம்.

கோழி அம்மை நோய் (Fowl pox)

கோழி அம்மை நோய், கோழியினங்களை தாக்கும் ஒரு நச்சுயிரி நோயாகும். இந்நோயை தடுப்பதற்கு தடுப்பு மருந்துகள் பயன்படுத்த வேண்டும். நோய் கண்ட நிலையில் மூலிகை முதல் உதவி மருத்துவம் நல்ல பலன் தரும்.

10 கோழிகள் அல்லது 5 வான்கோழிகளுக்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்

வெளிப்பூச்சுக்கான மருந்து

  • பூண்டு - 10 பல்

  • துளசி இலை - 50 கிராம்

  • வேம்பு இலை - 50 கிராம்

  • மஞ்சள் தூள் - 10 கிராம்

  • சூடம் - 50 கிராம்

  • சின்ன சீரகம் (இடித்து சலித்தது) - 20 கிராம்

சிகிச்சை முறை

மேற்கண்ட பொருட்களை நன்கு அரைத்து அக்கலவையுடன் விளக்கெண்ணெய் – 100 மி.லி மற்றும் வேப்பஎண்ணெய் – 100 மி.லி. சம அளவில் கலந்து சிறிது சூடு காட்டி பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும்.

உட் செலுத்துதல் (வாய் வழியாக)

  • சின்ன சீரகம் - 10 கிராம்

  • மஞ்சள் - 5 கிராம்

  • மிளகு - 5 எண்ணிக்கை

  • பூண்டு - 5 பல்

  • வேப்பிலை - 10 இலைகள்

  • துளசி - 10 இலைகள்

சிகிச்சை முறை 

மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும்.மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உள்ளே செலுத்த வேண்டும்.

Traditional first aid  for chicken

வெள்ளைக் கழிச்சல் நோய் (Ranikhet Disease)

வெள்ளைக் கழிச்சல் நோய், கோழியினங்களை தாக்கி மிகவும் பாதிப்பு எற்படுத்தும் ஒரு நச்சுயிரி நோயாகும். முதல் வாரத்திலும் அதை தொடர்ந்தும் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு செய்ய வேண்டும். நோய் கண்ட நிலையில் கீழ்கண்ட மூலிகை மருத்துவம் பயன்படுத்தலாம்.

10 கோழிகள் அல்லது 5 வான் கோழிகளுக்குத் தேவைப்படும் மூலிகை மற்றும் பொருட்கள்

  • சின்ன சீரகம் - 10 கிராம்

  • மிளகு - 5 கிராம்

  • மஞ்சள் தூள் - 50 கிராம்

  • கீழாநெல்லி இலை - 50 கிராம்

  • வெங்காயம் - 5 பல்

  • பூண்டு - 5 பல்

சிகிச்சை முறை : வாய் வழியாக

சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்க சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்த வேண்டும்.

கழிச்சல் (Enteritis)

10 கோழிகள் அல்லது 5 வான் கோழிகளுக்கு 

  • சின்ன சீரகம் - 10 கிராம்

  • கசகசா - 5 கிராம்

  • வெந்தயம் - 5 கிராம்

  • மிளகு - 5 எண்ணிக்கை

  • மஞ்சள் தூள் - 5 கிராம்

  • பெருங்காயம் - 5 கிராம்

சிகிச்சை முறை : வாய் வழியாக

மேற்கண்ட பொருட்களை கருக வறுத்து இடித்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் – 5 பல் பூண்டு – 5 பல் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு அரைத்த பொருட்களை இடித்த பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையைத் தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும்.

மேலும் படிக்க...

கால்நடைகளுக்கான அவசர முதலுதவி சிகிச்சை முறைகள்!

நல்ல சத்தான கோழி வளர்ப்பு - அருமையான தீவனங்கள்!

''ஏழைகளின் பசு'' என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்!

English Summary: Lets know about Traditional first aid herbal medicine for chickens Published on: 05 August 2020, 04:11 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.