நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை சார்ந்து தொழில் தொடங்குவதற்கும், பால், இறைச்சி, தீவன பதப்படுத்தும் தொழில் செய்வதற்கும், விரிவாக்கம் செய்திடவும் மானியம் வழங்கப்படும் என கால்நடைத்துறை அறிவித்துள்ளது.
கால்நடை தொழிலுக்கு மானியம்
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள், தொழில் முனைவோா்கள், தனியாா் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பால், இறைச்சி மற்றும் தீவன பதப்படுத்தும் அலகுகள் அமைத்திடவும், தொழில் விரிவாக்கம் செய்திடவும் நிதியுதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோா் உரிய திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்.
90% வரை கடன் வசதி
தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பில் 90 சதவீதம் வங்கி கடன் பெறும் வசதி உள்ளது. இதில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலும், இதர நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும் ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மாடுகளின் வயதை எப்படி கண்டுபிடிப்பது? எளிய வழி அறிவோம்!
Share your comments