மாடுகள் குட்டிகளை ஈன்று அவற்றின் இனத்தைப் பெருக்குவதே, அதனை வளர்ப்பவர்களுக்கும், மாட்டிற்கும் நல்லது. ஆகப் பருவத்துக்குவந்தும் மாடுகள் சினைபிடிக்காமை என்பது சில மாடுகளில் தீராதப் பிரச்னையாக உள்ளது. இதனை இயற்கையான மருந்து மூலமே குணப்படுத்த முடியும்.
இயற்கை மருந்து (Natural Medicine)
தேவையான பொருட்கள் (Ingredients)
-
முள்ளங்கி
-
சோற்றுக்கற்றாழை
-
பிரண்டை
-
முருங்கை
-
கருவேப்பிலை
-
உப்பு
-
வெல்லம்
பயன்படுத்தும் முறை (How to use)
பருவத்துக்கு வந்த முதல் அல்லது இரண்டாவது நாளில் இருந்து சிகிச்சையைத் தொடங்கவும்.
நாளுக்கு ஒருமுறை வெல்லம் மற்றும் உப்புடன் புதிதாகப் பறித்த கீழ்க்கண்டவற்றை கீழே கொடுத்துள்ள வரிசைப்படி வாய்வழியாய் கொடுக்கவும்
-
தினமும் 1 வெள்ளைமுள்ளங்கி 5 நாட்களுக்கு
-
தினமும் 1 சோற்றுக் கற்றாழைமடல் 4 நாட்களுக்கு
-
4 கையளவு முருங்கை இலை 4 நாட்களுக்கு
-
4 கையளவுபிரண்டைதண்டு 4 நாட்களுக்கு
-
4 கையளவு கருவேப்பிலையை மஞ்சளுடன்சேர்த்து 4 நாட்களுக்கு
இதனை தொடர்ந்து கொடுத்துவர மாடுகளில் சினைப்பிடித்தல் பிரச்னை படிப்படியாகத் தீரும்.
மேலும் படிக்க...
மாடுகளின் மடிநோய்க்கு மகத்தான மருந்து- தயாரிப்பது எப்படி?
மாடுகளை வெளிப்புற ஒட்டுண்ணியின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி?
Share your comments