நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக தேசிய ஆன்லைன் தேர்வு (National Online Exam), பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா (Vallabhai Kadhiriya) அறிவித்துள்ளார்.
கட்டணமில்லா தேர்வு:
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என யார் வேண்டும் என்றாலும் இத்தேர்வை கட்டணமின்றி எழுதலாம் என்றும், சிறந்த முறையில் பதில் அளிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுப் பசுமாடுகள் (cows) பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு (Awareness) ஏற்படுத்தும் வகையிலும், பால் வற்றிய பிறகும் கூட பசு மாடு வளர்ப்பில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்து அறியும் விதத்தில் தேர்வு நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கான பாடத்திட்டம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு:
நாட்டு பசுமாடுகளின் வகைகள், வளர்க்கும் முறை, தீவனம் மற்றும் பால் உற்பத்தி பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்தேர்வின் நோக்கம். இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். மேலும், நாட்டுப் பசுக்களை வளர்ப்பதில் உள்ள தொழில் நேர்த்தியைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மதுரையில் மானிய விலையில் ஆடு, மாடு, கோழிகளை வழங்கியது வேளாண் துறை!
குடும்பத் தேவைக்காக ஆடு வளர்க்கும் அமைச்சர்! கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சி!
Share your comments