1. கால்நடை

ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாந்திர வருவாய் பெற வாய்ப்பு!

KJ Staff
KJ Staff
Goat Breeding
Credit : Rural Living Today

விலையில்லா ஆடுகள் மூலம் புதிய விவசாய புரட்சியை அக்ரோடெக் நிறுவனம் செய்து வருகிறது. நமது இளைஞர்களின் கனவானது ஐடி (IT) துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்றாற்போல், அக்ரோடெக் (Agrotech) என்ற விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தின் வியாபார நுணுக்கம் முதலீட்டார்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரத்தில் உள்ள அக்ரோடெக் நிறுவனம் (Agrotech Company), தமிழகத்தில் மேலும் உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், பாண்டிச்சேரி, கள்ளக்குறிச்சி, நாகர்கோயில், மார்த்தாண்டம், திண்டுக்கல், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

வருமான வாய்ப்பு:

விவசாய மேம்பாடு மற்றும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம். அக்ரோடெக் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவருடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு படிகட்டுகள் உள்ளன. உதாரணமாக நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடும் விதமாக அவர்களிடம் இலவசமாக ஆடுகளை (free goats) கொடுத்து, அதற்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து அந்த ஆடுகள் மூலம் வருவாயை பெருக்குவது தான் நிறுவனத்தின் ஸ்மார்ட் திட்டமாக உள்ளது. மேலும், நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் நாட்டு மாட்டு சாணத்தில் (Cow dung) கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளித்து அதனை சந்தைப்படுத்தி வருமானத்திற்கு வழிவகுக்கின்றனர்.

தற்சார்பு பொருளாதாரம்

அந்த காலத்தில் விவசாயிகள், விவசாயத்தோடு சேர்த்து வீடுகளில் கால்நடைகளை (Livestock) வளர்த்தார்கள். இதனால் தற்சார்பு பொருளாதாரம் அவர்களிடம் மேம்பட்டு காணப்பட்டது. இதனையே காலத்திற்கு ஏற்ப டெக்னாலஜி உதவியுடன், மத்திய அரசின் திட்டங்களின் பங்களிப்புடன் அக்ரோடெக் நிறுவனம் புதுமையாக செய்து வருகிறது. பெண்களே நாட்டின் கண்கள் என்பதால், இந்த நிறுவனத்தினர் மகளிர் சுய உதவி குழுக்களை (Womens self help groups) உருவாக்கி அவர்களுக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் நாட்டு கோழி குஞ்சுகள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அவற்றிற்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் அக்ரோடெக் நிறுவனம் பார்த்து கொள்கிறது.

அடிப்படை திட்டம்:

குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து மாதம் 5% வியாபார லாபமாக 20 மாதங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள். 20 மாதங்களுக்கு பிறகு 100% முதலீட்டு தொகையையும் பெற்றிடுங்கள் இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, பல்வேறு வியாபார நுணுக்கங்களை உருவாக்கி அனைவரும் பயனடையும் வகையில் திட்டம் வகுத்துள்ளனர். மேலும் இந்நிறுவனத்தில் பங்குபெற்று ஆடு, கோழி வளர்ப்பு திட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் +91 98842 99871 , +91 70101 44851. ஈமெயில் - info@agrotechfpc.org

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்! வேளாண் துறை ஆலோசனை!

கோடையில் பயிர்களை காப்பாற்ற செயற்கை குட்டைகள் அமைத்த விவசாயிகள்!

English Summary: Opportunity to invest in a goat breeding program and earn a monthly income Published on: 20 March 2021, 05:10 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.