மாடுகளில் சினை தங்காமைப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமானால், தாது உப்பு கலவை வழங்க வேண்டும் என வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அம்மை நோய்க்கு தடுப்பு (Prevention of measles)
செம்மறி ஆடுகளுக்கு, அம்மை தடுப் பூசி போடுவதன் மூலம், வரும் மாதங்களில், அம்மை நோயிலிருந்து ஆடுகளை பாதுகாக்கலாம்.
நாட்டுக்கோழிகளுக்கு ராணிக் கெட்நோய் தடுப்பூசி போடுவதன் மூலம், கோழிகளை, வெள்ளைக் கழிச்சல் நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.
உற்பத்தி திறன் மேம்பட (Improve productivity)
கால்நடைகளுக்கு புரதச்சத்து மிக்க அசோலாயை, தீவனத்துடன் கலந்து அளிப்பதால், தீவன செலவு குறைவதோடு, கால்நடைகளின் உற்பத்தி திறனும் மேம்படுகிறது.
மாடுகளுக்கு தினமும், 25- 30 கிராம் தாது உப்பு கலவையை அளிப்பதன் மூலம், சீரான உடல் வளர்ச்சி ஏற்படுவதுடன், இனப்பெரும் கத்துக்கு தேவையான தாது உப்பும் கிடைக்கப் பெறும்.
இதனால், களைப் பெருக்கமின்மை, சினை தங்காமை போன்ற பிரச்னைகளில் இருந்து எளிதில் குணமடையலாம். எனவே கால்நடை விவசாயிகள் இந்த நுட்பங்களைத் தெரிந்துகொண்டு, தங்கள் கால்நடைகளுக்கு தவறாது கொடுத்து, நோய்களில் இருந்து அவற்றைப் பாதுகாக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!
வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?
பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!
Share your comments