1. கால்நடை

கால்நடைகளுக்குத் தீவனமாகும் தங்கரளி இலைகளில் விஷத்தன்மை - இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Fodder
Credit : Daily Thandhi

உடுமலை பகுதியில் கால்நடைகளுக்குத் தீவனமாக தங்கரளி இலைகளை கால்நடை வளர்ப்பவர்கள் சேகரித்து வருகிறார்கள். கோடையில் ஏற்படும் தீவனத் தட்டுப்பாட்டை (Fodder shortage) வெகுவாக குறைக்க இது உதவுகிறது.

கால்நடை வளர்ப்பு

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அத்துடன் உப தொழிலாக கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் நிலத்தில் கிடைக்கும் விவசாயக் கழிவுகளான சோளத்தட்டை, வைக்கோல், காய்கறிக்கழிவுகள் போன்றவற்றை கால்நடைகளுக்கு (Livestock) உணவாக்குகின்றனர். இதுதவிர தீவனச் சோளம், நேப்பியர்புல், எருமைப்புல், கினியாப்புல், கொழுக்கட்டைப் புல், முயல் மசால், வேலி மசால் போன்றவற்றையும் தங்கள் விளைநிலங்களிலேயே சாகுபடி (Cultivation) செய்து கொள்கின்றனர். இதுதவிர ஒருசிலர் கால்நடைகள் வளர்ப்பை மட்டுமே பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர்.

Livestock
Credit : Dinamani

மேய்ச்சல் நிலங்கள்

கால்நடை வளர்ப்பவர்கள் புறம்போக்கு மேய்ச்சல் நிலங்களில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதற்கென அரசு ஒவ்வொரு கிராமத்திலும் புறம்போக்கு மேய்ச்சல் நிலங்கள் என்று வகைப்படுத்தி நிலங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் காலப்போக்கில் பல பகுதிகளில் இலவச வீட்டு மனை மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகளுக்காக அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து போன நிலையில், விவசாய நிலமில்லாதவர்களுக்கு கால்நடை வளர்ப்பு சிரமமான விஷயமாக மாறிவிட்டது. எனவே அவர்கள் கால்நடைகளுக்கான தீவனங்களை (Fodder) பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சேகரித்து வருகின்றனர். அந்தவகையில் உடுமலையை அடுத்த ஜல்லிப்பட்டி பகுதியில் சாலையோரங்களில் உயிர் வேலியாக வளர்ந்துள்ள தங்கரளி இலைகளைச் சேகரிக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

வேலிப்பயிர்

அரளியில் செவ்வரளி, மட்டரளி, அடுக்கு அரளி, தங்கரளி என்று பல வகைகள் உள்ளது. இதில் தங்கரளியை பொன்னரளி, காசி அரளி என்றும் சொல்வார்கள். இது இந்த பகுதியில் சாலையோரங்களில் விளை நிலங்களுக்கு உயிர் வேலியாகவும், வேலிப் பயிராகவும் வளர்க்கப்படுகிறது. இது கடும் வறட்சியையும் தாங்கி வளரக் கூடியதாகும். பொதுவாக கடும் கோடையில் அனைத்து விதமான புற்களும் கருகியிருக்கும் சூழலிலும் இந்த செடிகள் பச்சைப் பசேலென்று வளர்ந்திருப்பதுடன் அழகிய மஞ்சள் நிறத்தில் பூத்திருக்கும். இதனாலேயே ஒருசில பகுதிகளில் இதனை அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். இவற்றின் இலைகளைச் சேகரித்து ஆடுகளுக்கு தீவனமாக கொடுக்கிறோம்.ஆனால் பிஞ்சுகள் இல்லாமல் கவனமாக சேகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறிய குட்டிகளுக்கு தொண்டையில் சிக்கி இறந்து விடும். கடும் கோடையிலும் கைகொடுக்கும் தீவனமாக தங்கரளி உள்ளது
என்று விவசாயிகள் கூறினர்.

விஷத்தன்மை

தங்கரளி எனப்படும் இதன் தாவரவியல் பெயர் கேஸபெல்லா தெவேட்டியா ஆகும். இதில் கேஸபெல்லா என்ற வார்த்தை ஸ்பானிஷ் மொழியில் ரேட்டில் ஸ்நேக் எனப்படும் பாம்பைக் குறிப்பிடும் சொல்லாகும். அந்த அளவுக்கு விஷத் தன்மை கொண்டது என்பதைக் குறிப்பிடுவதற்காக இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக அரளி விதை என்பது கிராமப் புறங்களில் தற்கொலை செய்வதற்கான ஒரு விஷயமாகவே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இதன் இலைகள் மற்றும் கிளைகளிலிருந்து வரும் பாலும் விஷத்தன்மை (Poisonous) கொண்டதாகவே உள்ளது. இதன் விஷத்தன்மை குறித்து தெரிந்து கொள்ளாமல், இதனை தீவனமாகப் பயன்படுத்தி வருகிறார்களா அல்லது தெரிந்தே எச்சரிக்கை உணர்வுடன் விதைகளை அகற்றி விட்டு தீவனமாகப் பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும் கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற நிலையில் தான் கால்நடைகள் இருக்கும். எனவே இதுபோன்ற கால்நடைத் தீவனங்களைத் தவிர்க்கலாம். இவை வேலிப் பயிராக வளர்க்கப்படும் போது உயிர் வேலியாக விளங்கி விளை நிலங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் பார்ப்பதற்கும் மிகவும் அழகானதாக இருக்கும். அத்துடன் இதன் பயன்பாட்டை நிறுத்திக் கொள்வது நல்லது என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க

கால்நடைகளுக்கு கோடை கால தீவனப் பற்றாக்குறையைப் போக்க மர இலைகள்! கால்நடை மருத்துவர் யோசனை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

English Summary: Poisonous of thangarali leaves as fodder for livestock - Nature lovers beware! Published on: 19 May 2021, 10:43 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.