கோழி இறைச்சி உற்பத்தியை கோழிப்பண்ணையாளர்கள் நிறுத்த முடிவு செய்திருப்பதால், இன்னும் சில தினங்களில், கோழி இறைச்சிக் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் அசைவ பிரியர்களைக் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
கறிக்கோழிகள்
தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் கறி கோழி விவசாயிகள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்த கறி கோழிகளை சம்பந்தப்பட்ட கறி கோழி பண்ணையில் மொத்தமாக விற்பனை செய்வது வழக்கம்.
விலை உயர்வு
கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இடுபொருட்களின் விலை உயர்வால் முறைபடுத்தாத குறைந்தபட்ச வளர்ப்பு தொகை மற்றும் அடுக்கு விகிதம் தரமற்ற போன்ற காரணங்களால், விவசாயிகள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயலை கண்டித்து 29-4-2022ம் தேதி முதல் முழுமையான உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கறிக்கோழி பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக கறிக்கோழி மட்டுமே வளர்ப்பு தொகை மற்றும் இதர கறிக்கோழி வளர்ப்பு தொடர்பாக பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதில் சமாதானம் அடையாத கறிக்கோழி பணியாளர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, வரும் 29ம் தேதி முதல் முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கறிக்கோழி பணியாளர்கள் பங்கேற்கிறார்கள். எனவே அசைவப் ப்ரியர்களுக்கு இன்னும் சில நாட்களுக்குப் பிறகு சிக்கன், கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments