வேளாண்மை என்பது வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக மாறிவருகிறது. இதன் தேவையை அறிந்து மத்திய மாநில அரசுகளும் இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகக் கால்நடைத் துறையை மேம்படுத்த ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பண்ணைத் தொழிலுடன் சேர்ந்த கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக லாபம் பெறலாம். இங்கு சில லாபகரமான பண்ணைத் தொழில்கள் குறித்து பார்க்கலாம்.
விவசாயத்தில் லாபகரமான தொழில்கள்
கால்நடை வளர்ப்பின் மூலம் சிறு சிறு முதலீட்டில் மதிப்புக்கூட்டு பொருட்களைச் செய்து அதிக லாபம் பெற முடியும். பால், இறைச்சி விற்பனை மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.
பால் பண்ணை - Dairy farming
விவசாயிகளின் முக்கிய உபதொழிலாக கறவை மாடு வளர்ப்பு உள்ளது. இதனால் பால் பண்ணை அமைப்பது என்பது விவசாயிகளுக்கு எளிதான காரியம். பால் மற்றும் பால் சார்ந்த மதிப்புக்கூட்டப்படத் தொழில்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு உள்ளது. எனவே விவசாயிகள் பால் பண்ணையைத் துவங்குவதன் மூலம் நல்ல லாபம் ஈட்டலாம்.
பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழு லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு கடன் வழங்குகிறது. மேலும் நபார்டு வங்கி மூலமும் பால் பண்ணை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
நாட்டுக்கோழி வளர்ப்பு - Native chicken Farming
குறைந்த முதலீட்டிலும், எளிமையான பராமரிப்பிலும் அதிக லாபம் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை வீட்டில் இருக்கும் பெண்களும் மேற்கொள்ளலாம், பிற கோழி இனங்களைக் காட்டிலும் நாட்டுக் கோழிக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இதனால் நோய் பாதிப்பு குறைவு.
இதன் இறைச்சி மற்றும் முட்டைக்கு அசைவ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. தமிழக அரசு சார்பில் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு என்று நிதியுதவி மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. அதே போல் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, வருஷத்திற்கு 4 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க! பார்த்தசாரதி சொல்றத கேளுங்க..!
காடை வளர்ப்பு - Quail farming
குறைந்த அளவிலான முதலீடு மூலம் எளிதில் காடை வளர்ப்பை துவங்கலாம். தமிழகத்தில் தற்போது அதிகம் வளர்ந்து வரும் தொழிலாக காடை வளர்ப்பு மாறி வருகிறது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. ஒரு வருடத்தில் மூன்று முதல் நான்கு தலைமுறைகளைப் பெற்றெடுக்கும் திறன் காடைக்கு உண்டு. பெண் காடை 45 வயதிலிருந்தே முட்டையிடத் தொடங்குகிறது. 8 முதல் 10 காடைகளை ஒரு கோழிக்கு ஈடாக பார்க்கலாம்.
மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!
மீன் வளர்ப்பு - Fish Farming
விவசாயத்துடன் மீன் வளர்ப்பையும் எளிதாக செய்யலாம். பீகார் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நெல் வயல்களில் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு ஏக்கர் குளத்தில் மீன் வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.6-8 லட்சம் வரை சம்பாதிக்கலாம். நன்னீர் குளத்தில் மீன் வளர்ப்புடன் சேர்த்து வளர்ப்பையும் மேற்கொள்ளலாம்.
நல்ல சத்தான கோழி வளர்ப்பு - அருமையான தீவனங்கள்!
''ஏழைகளின் பசு'' என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்பின் நன்மைகள்!
Share your comments