1. கால்நடை

அரசு மானியத்துடன் கால்நடை வளர்ப்பு, இதோ உங்களுக்கான தொழில் ஐடியாக்கள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

இன்றைய சூழலில் படித்த இளைஞர்கள் பலரும் சுய தொழில் தொடங்கவே அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்றைய வேளாண்துறையின் தேவை காரணமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் தொழில் வாய்ப்புகளை திட்டமிட்டு வருகின்றனர். இதனை உக்குவிக்கும் வகையில் அரசு மானியங்களையும் அளித்து வருகிறது. இதனை முறையாக சரியாக பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை எளிதில் இரட்டிப்பாக்க முடியும்.

கால்நடை வளர்ப்பு வர்த்தகத்தில் பல்வேறு விலங்குகள் மூலம் வருமானம் ஈட்டலாம். இருப்பினும், அதிக லாபம் ஈட்ட உதவும் நான்கு முக்கிய விலங்குகள் ஆடு, மாடு, மீன், கோழி இவைகள் மூலம் தொழில் தொடங்குவது குறித்து இந்த செய்தியில் விரிவாகப் பார்ப்போம்.

ஆடு வளர்ப்பு - Goat rearing business

ஆடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் அதிக லாபம் ஈட்ட முடியும். 5 ஆடுகளை வளர்ப்பதன் மூலமும் இந்த தொழிலைத் தொடங்கலாம். ஒரு ஆடு 6 மாதங்களில் இரண்டு குட்டிகளைத் தருகிறது. ஒரு ஆட்டுக்குட்டியை சந்தையில் ரூ .4000க்கு விற்றால், இரண்டு குட்டிகளிடம் இருந்து ரூ.8000 முதல் ரூ.9000 வரை சம்பாதிக்கலாம். ஆடு வளர்ப்பிற்காக அரசாங்கமும் கடன் அளிக்கிறது. மேலும் ஆட்டு இறைச்சி நல்ல விலை கிடைக்கிறது. போஷாக்கு நிறைந்த ஆட்டு பால் மூலமும், ஆட்டு தோல் மூலமும் பல்வேறு வகைகளில் சம்பாதிக்கலாம்.

கோழிப் வளர்ப்பு - Poultry business

கோழி மற்றும் கோழிக்குஞ்சு வளர்ப்பு தொழிலும் நல்ல முன்னேற்றமடைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் கோழிப்பண்ணை விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் கோழி பண்ணைகள் திறக்கப்படுகின்றன. கோழி வளர்ப்பில், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை வியாபாரம் செய்வதன் மூலம் லாபம் சம்பாதிக்கலாம். புரோட்டீன் காரணமாக முட்டை மற்றும் இறைச்சி விற்பனையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

காளை & பசு வளர்ப்பு தொழில் - Cow farming business

மாடு வளர்ப்பு தொழில் நிறைய வளர்ச்சியடைந்துள்ளது. பசு வளர்ப்பின் முக்கியத்துவம் இனி கிராமத்துக்கு மட்டும் இல்லாமல் நகரங்களில் அதன் வளர்ச்சி வேறுவிதமாக உள்ளது. பசுக்களை வளர்ப்பதன் மூலம் பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

பால் மற்றும் மாட்டு சாணம் இரண்டையும் பயன்படுத்தலாம் என்பதால் பசு வளர்ப்பு மிகவும் இலாபகரமான வணிகமாகும். 4 முதல் 5 மாடுகளை மட்டுமே வைத்துக்கொண்டும் மாட்டுப்பண்ணை தொழிலைத் தொடங்க முடியும்.

பசுவின் பால் குறித்து பார்க்கும் போது, ஒரு மாடு வழக்கமாக 30 முதல் 35 லிட்டர் பால் கொடுக்கும், ஒரு லிட்டர் பாலின் விலை ரூ .40 ஆக கொண்டால் ஒரு நாளில் சுமார் ரூ .1200 சம்பாதிக்கலாம் அல்லது 5 பசுவின் பாலில் இருந்து ரூ .6000 வரை சம்பாதிக்கலாம். உங்கள் தீவனம் செலவுகள் போன்றவற்றை அதிலிருந்து நீக்க வேண்டும் என்றால், குறைந்தது 5 மாடுகளுக்கு ஒரு நாளில் ரூ.2000 வரை சம்பாதிக்கலாம்.

இது தவிர, பால், தயிர், மோர், நெய் மற்றும் மாவா மூலமாகவும், மாட்டு சாணத்திலிருந்து எரிவாயு, உரம் போன்றவற்றை தயாரிப்பதன் மூலமும் அதிக லாபம் ஈட்ட முடியும்.

மீன் பண்ணை - Fisheries Business

மீன் பண்ணை அமைக்க மத்திய மாநில அரசுகள் மூலம் அதிக மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. மீன் வளர்ப்பில் செலவுகள் மிகக்குறைவு, நிறைவான லாபம் உள்ளது. தற்போதைய விஞ்ஞான உலகில், செயற்கை தொட்டிகள், குளங்கள் போன்றவற்றிலும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

மீன் இறைச்சியை உட்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நல்ல புரதம் மற்றும் மீன்எண்ணெய்க்காக மருத்துவ நோக்கம் கருதி உட்கொள்கிறார்கள். வகை வகையான மீன்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மீனுக்கு ஒரு கிலோ மதிப்பு இருந்தால், அந்த ஒரு கிலோ மீனை ரூ.100க்கு விற்பனை செய்யலாம். 5000 மீன்களின் படி மாதத்திற்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம்.

அரசின் மானிய உதவிகள்

இந்த வகையான கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொழிலுக்கு மத்திய மாநிய அரசுகள் பல்வேறு வகையில் மானியம் அளிக்கிறது. கொட்டகை அமைப்பதில் தொடங்கி, மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்கவும், அதனை சந்தைப்படுத்தவும் என அனைத்து வகையிலும் அரசு ஏற்பாடு செய்து தருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இதன் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொழிலை தொடங்குவது மிகவும் எளிதானது.

மேலும் படிக்க....

எளிய பராமரிப்பு, அதிக இறைச்சி, நிறைவான லாபம் - முயல் வளர்ப்பு!!

பசுந்தீவன உற்பத்தி முறைகள் குறித்த இணையவழி பயிற்சி!

கால்நடை ஆம்புலன்ஸ் உடன் ஆடு ஆராய்ச்சி நிலையம் வேண்டும் - கரூர் விவசாயிகள் கோரிக்கை!!

English Summary: Profitable livestock Business ideas with Government Subsidy, Start now to double your income Published on: 26 March 2021, 11:41 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.