பொதுவாக பாம்பு என்றாலே நம்மில் பலருக்கும் பயம் உருவாகும். ஏனெனில் அதன் விஷத்தன்மையும், கடித்தால் உயிர் போய்விடும் என்ற அச்சமும். அதனால்தான் பாம்பு என்றால் படையே நடுங்கும் என்கிறார்கள்.
பாம்பு ஸ்கிப்பிங் (Snake skipping)
இருப்பினும் இளம்கன்று பயம் அறியாது என்பதற்கு இணங்க தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பாம்பைக் கொண்டு இளைஞர் ஒருவர் ஸ்கிப்பிங் ஆடுகிறார்.
இளைஞர் ஒருவர் குப்பைகளை கொட்டும் பகுதியில் நின்று கொண்டு பாம்பினை தனது இரண்டு கைகளால் பிடித்து கொண்டு ஸ்கிப்பிங் ஆடிவிட்டு இறுதியாக குப்பைகள் இருக்கும் பகுதிகள் நோக்கி நகர்ந்து செல்கின்றார்.
துன்புறுத்தல் தேவையா? (Need Persecution?)
நன்கு வளர்ந்த பாம்பினை இளைஞர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடிவிட்டுப் பின்னர் தூக்கி எறியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் பாம்பு இறந்த நிலையில் உள்ளது.ஆனால் இறந்த பிறகும் அந்தப் பாம்பை துன்புறுத்துவதாக்கூறி, பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் மற்றவர் கவனத்தைத் தன்வசம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, இளையத் தலைமுறையினர் இதுபோன்றப் பலவித முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
மரியாதையே கடமை (Duty is respect)
அப்படி உருவான ஒரு முயற்சிதான் இது. ஆனால், இறந்த ஒரு உயிருக்கு மரியாதை செலுத்த வேண்டியது நமதுக் கடமை. அதைவிட்டுவிட்டு, இறந்து போனப் பாம்பை அந்தத் தருணத்திலும் துன்புறுத்துவதைத் தவிர்த்திருக்கலாம்.
மேலும் படிக்க...
உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க இதைப் பண்ணுங்க!
Share your comments