காங்கேயம் இன மாடுகளுக்கு சினைபிடிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 'நபார்டு' வங்கி உதவியுடன், 'ஹார்மோன்' சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கம்பீரமான காங்கேயம் இன மாடுகள், விவசாய பணிகளுக்கு பிரசித்தி பெற்றவை. நீண்ட இடைவெளிக்கு பின், இவ்வகை மாடு வளர்ப்பு அதிகரித்துள்ளது. தரமான பால் மட்டுமின்றி சாணம், கோமியம் போன்றவையும், விற்பனை பொருளாக மாற்றப்படுகிறது.
காங்கேயம் மாடுகள், எளிதாக சினையாகாமல் இருப்பதும், கன்று ஈனிய பிறகு, பல மாதங்கள் சினை பருவத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதும் சவாலாக மாறியுள்ளது. பால் உற்பத்தி இல்லாததால், மாடுகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஹார்மோன் சிகிச்சை (Hormone Treatment)
கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் கூறியதாவது: காங்கேயம் நாட்டு மாடுகள், 16 மாத இடைவெளியில், கன்று ஈன வேண்டும். மாறாக, ஹார்மோன் பிரச்னையால், கன்று ஈனும் இடைவெளி அதிகரிப்பதால், நஷ்டம் ஏற்படுகிறது. சரியான இடைவெளியுடன், கன்று ஈனும் இடைவெளியை பராமரிக்க, ஹார்மோன் சிகிச்சை அவசியம். அதற்காக, நபார்டு வங்கி உதவியுடன் கால்நடைத்துறை சார்பில், சிறப்பு சிகிச்சை அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
காங்கேயம் நாட்டு மாடுகள் உள்ள பகுதியில் சிறப்பு பயிற்சியும், சிகிச்சை முகாமும் நடத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
மேலும் படிக்க
மாட்டுத்தீவன மானியம் நிறுத்தம்: அதிர்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள்!
Share your comments