சேலம் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டத்தில், பயன்பெற முன்வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காப்பீடு என்பது இக்கட்டானக் காலங்களில் நமக்கும் பெரிதும் கைகொடுத்து, அந்த சூழ்நிலையில் இருந்து நாம் மீண்டு வருவதற்கு உதவி செய்யும் பாதுகாப்பு ஆயுதம் என்றே சொல்லலாம்.
விலங்குகளுக்கும் காப்பீடு (Animal insurance)
அந்த வகையில், மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகள், செல்லப்பிராணிகள் உள்ளிட்டவற்றுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் காப்பீடு வழங்கி வருகின்றன.குறிப்பாக அரசு சார்பில் கால்நடை விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்காக, கால்நடைகளுக்கான மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது-
இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
காப்பீடு திட்டம் (Insurance plan)
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம், 2020 - 21ம் ஆண்டுக்கு, மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி இந்த மாவட்டத்தில் கால்நடைக் காப்பீடு செய்ய 9100 குறியீடு நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.35,000 வரை காப்பீடு (Insurance up to Rs.35,000)
இத்திட்டத்தில் அதிகபட்சம், 35 ஆயிரம் ரூபாய்வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம்.
70% மானியம் (70% subsidy)
வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு, 50 சதவீத மானியத்திலும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, 70 சதவீத மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.
5 கால்நடைகளுக்கு (For 5 cattle)
இதன்மூலம் அதிகபட்சம் ஒரு குடும்பத்துக்கு, 5 பசு, எருமை மாடுகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம்.
வயது (Age)
இரண்டரை வயது முதல், 8 வயது பசு, எருமை, 1 வயது முதல், 3 வயதுடைய ஆடுகளுக்கும் காப்பீடு செய்யலாம்.
காப்பீடு கட்டணம் (Insurance premium)
ஓராண்டு காப்பீடு கட்டணம் அதிகபட்ச கால்நடை மதிப்பில், 1.70 சதவீதம், மூன்றாண்டு காப்பீடு கட்டணம் அதிகபட்ச கால்நடை மதிப்பில், 4.30 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள (contact)
காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கால்நடைகளுக்கு கோடை கால தீவனப் பற்றாக்குறையைப் போக்க மர இலைகள்! கால்நடை மருத்துவர் யோசனை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!
Share your comments