கோடை காலம் நெருங்கி வருவதால், அதனை சமாளிக்க சமாளிக்க ஏதுவாக கால்நடை தீவனங்களை சேமிப்பதே மிகச் சிறந்த யுக்தி.
சேமிப்பு (Saving)
கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலைப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கோடை காலத்தை சமாளிக்க, தீவனப்பயிர்களை சேமித்து இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர்.
ஆனைமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், தென்னை, வாழை, நெல் உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பால் விற்பனை செய்யவும், உரம் தயாரிக்கவும் பலரும் கால்நடைகள் வளர்க்கின்றனர்.
கால்நடைகளுக்கு சோளத்தட்டு, நிலக்கடலை கொடி, வைக்கோல் உள்ளிட்டவற்றை பிரதான உலர் தீவனமாக வழங்குகின்றனர்.
உலர் தீவனம் (Dry fodder)
மழைக்காலத்தை பயன்படுத்தி, பலரும் சோளம், நிலக்கடலையை மானாவாரி பயிராக சாகுபடி செய்து, கோடை காலத்தை சமாளிக்க உலர் தீவனத்தை சேமித்து வைப்பது வழக்கம்.
கோடையில், கால்நடைகளுக்கு உலர் தீவனம் மற்றும் பசுந்தாள் தீவனம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஆனைமலை விவசாயிகள், அக்டோபர் மாத இறுதியில் மழையை பயன்படுத்தி, சோளம் சாகுபடி செய்தனர். தற்போது, அறுவடைப்பருவத்தை எட்டியுள்ளதால், ஒன்றியம் முழுவதிலும் சோளம் அறுவடை தீவிரமாக நடக்கிறது.
பல இடங்களில், அறுவடை செய்த சோளத்தை குச்சு ஊன்றி உலரவைத்து வருகின்றனர்.
வைக்கோல் சேமிப்பு (Straw storage)
அதேபோல், நெல் அறுவடை முடிந்த பகுதிகளிலும், வைக்கோல் சேமித்து வருகின்றனர்.
நடப்பாண்டு போதிய அளவு மழை பெய்ததால், தீவன பயிர்கள் சாகுபடி அதிகரித்துள்ளது. எனவே எதிர்வரும் கோடை காலத்தில், தீவனத்தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
நீங்க டிகிரி முடிச்ச பெண்ணா? அப்படினா உங்களுக்கு ரூ.50,000!
Share your comments