பொதுவாக, புதிய அரசு,ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது, முந்தைய அரசின் திட்டங்களைத் தொடர வேண்டிய அவசியம் இல்லை என்பதே உண்மை. நிதிப்பற்றாக்குறை உள்ளிட்டக் காரணங்களைக் கூறி நிறுத்தி வைப்பது தொடர்கதையாகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசு கொண்டுந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவைத்த நிலையில், விலையில்லா கறவை மாடு, நாட்டுக் கோழி வழங்கும், முந்தைய அதிமுக அரசின் மேலும் 2 திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்படி, முந்தைய அதிமுக அரசு, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசு சார்பில் 1 பவுன் தங்கம் மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 ஆயிரமும், 12ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது.தாலிக்குத் தங்கம் என்ற அந்தத் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்காமல் கைவிட்டது. மேலும், கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமாகக் கறவை மாடு வழங்குதல், நாட்டுக்கோழி வழங்குதல் ஆகிய அதிமுக அரசின் மேலும் 2 திட்டங்களை திமுக அரசு நிறுத்திவைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முந்தைய அதிமுக அரசால் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த 3 திட்டங்கள் மூலம், சுமார் 2.4 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
இதேபோல், முந்தைய அதிமுக அரசு 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 12,000 கறவை மாடுகள் மூலம் பால் உற்பத்தியாளர்கள் 100% மானியத்தில் மாடுகளைப் பெற்றனர். ஆளும் திமுக அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகள் மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தப் பெண்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments