1. கால்நடை

உலகிலேயே குள்ளமான பசு- வெறும் 51 சென்டிமீட்டர்தான் அதன் உயரம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The world's shortest cow - just 51 centimeters tall!
Credit : Dinamalar

வங்கதேசத்தில் வாழும் 51 செ.மீ., உயரமுள்ள உலகின் மிகக் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

மற்றவர்களைக் கவரும் (Attracting others)

பொதுவாக உலகிலேயே பெரிய விஷயமாக இருந்தாலும், சிறிய விஷயமாக இருந்தாலும் அது அதிக முக்கியத்துவம் பெறும்.

உலகை ஈர்த்தது (Attracted the world)

அந்த வகையில், 51 சென்டிமீட்டர் உயரமுள்ள பசு, தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

26 கிலோ எடை (Weight 26 kg)

வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. 26 கிலோ எடை கொண்ட இந்த பசுவின் உயரம் எவ்வளவு தெரியுமா? வெறும் 51 சென்டிமீட்டர்தான். நீளம், 66 சென்டி மீட்டர். எடை 26 கிலோ.

பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசுவாகக் கருதப்படுகிறது.

பகிரப்படும் தகவல் (Information to be shared)

இந்த பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

குவியும் மக்கள் (Accumulating people)

இதனால், கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவைக் காண ஆயிரக்கணக்கானோர். அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் அறிவுறுத்தல் (Instruction of officers)

இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

முந்தைய சாதனை (Previous record)

இதற்கு முன்னதாக கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ., என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை!

கோழிகளுக்கு வெப்ப அயற்சியைத் தடுக்க குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும்! ஆராய்ச்சி நிலையம் தகவல்

பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!

English Summary: The world's shortest cow - just 51 centimeters tall! Published on: 09 July 2021, 06:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.