அழகுக்காக அறுவை சிகிச்சை செய்த ஒட்டகங்களுக்கு சவூதி அரேபியயாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒட்டக அழகுப் போட்டியில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டக அழகுப் போட்டி (Camel beauty contest)
ஆண்டுதோறும் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சர்வதேச ஒட்டகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். மன்னர் அப்துல்லாஹ் பெயரில் நடைபெறும் இந்த ஒட்டகப் போட்டியில் வெற்றி பெறும் ஒட்டக உரிமையாளருக்கு 66 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இதற்காக மத்தியத் தரைக்கடல் நாடுகள் பலவற்றில் இருந்து ரியாத் நகருக்கு ஒட்டக உரிமையாளர்கள் வருகை தந்து, ஆர்வத்துடன், அழகுக் போட்டில் தங்கள் ஒட்டகங்களைப் பங்கேற்கச் செய்வர். இந்த கண்காட்சி மூலமாக சவூதி அரேபிய அரசுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
சிறந்த ஒட்டகம் (The best camel)
நாய்கள் கண்காட்சியில் சிறப்பாகக் காட்சியளிக்கும் நாய்களுக்கு எவ்வாறு பரிசு வழங்கப்படுகிறதோ அதேபோல இந்த ஒட்டக கண்காட்சியில் சிறந்த தீவனம் கொடுத்து வாளிப்பாக வளர்க்கப்பட்டுள்ள ஒட்டகங்களுக்கும் சிறந்த ஒட்டகமாகத் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்படும். அவ்வாறுத் தேர்வு செய்யப்படும் ஒட்டகங்கள்மீது ஊடகங்களின் கவனம் திரும்பினால், அவை பிரபலமாகும்.
அறுவை சிகிச்சை (surgery)
-
ஆனால் இந்த போட்டியில் பங்கேற்க சில விதிமுறைகள் உண்டு. அங்கீகரிக்கப்பட்ட ஒட்டக இனங்களில் இருந்து மட்டுமே ஒட்டகங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படும்.
-
ஒட்டகங்களின் தோல் மிருதுவாக காட்சியளிக்கவும் முகம் பொலிவாக இருக்கவும் ஒட்டக உரிமையாளர்கள் பலர் தடைசெய்யப்பட்ட போட்டாஸ் ஊசிகளை ஒட்டகங்களுக்கு செலுத்துகின்றனர்.
-
தேவைப்பட்டால் ஒட்டகங்களின் அழகை கூட்ட சட்டவிரோத அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.
-
இதுபோல அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒட்டகங்கள் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இதற்காகவே போட்டி துவங்கும் முன்னர் ஒட்டகங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டு எக்ஸ் ரே சோதனை மேற்கொள்ளப்படும்.
-
கடந்த 2018ம் ஆண்டு அழகு அறுவை சிகிச்சை செய்த 12 ஒட்டகங்கள் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.
40 ஒட்டகங்களுக்குத் தடை (Prohibition for 40 camels)
தற்போது 2021ம் ஆண்டு 40 ஒட்டகங்களுக்கு இதே காரணத்துக்காக போட்டியில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு (Blame)
இந்தப் பரிசுத் தொகையை வெல்வதற்காக ஒட்டக உரிமையாளர்கள் பலர் இவ்வாறு மிருகவதை செய்ததாக தற்போது சவுதி அரேபியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு சவுதி அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
முதன் முதலாக சூரியனை தொட்டது அமெரிக்க விண்கலம்!
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
Share your comments