1. கால்நடை

புதிய விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்று முதல் தகுச்சான்று வழங்கல்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit:Samayam

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமே எதிர்பார்க்கும் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 14, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் காளைகளுக்கு இன்று முதல் கால்நடை மருத்துவமனைகளில் தகுதிச்சான்று வழங்கப்படுகிறது.

கொரோனா நோய் பரவல் காரணமாக உலகமே ஸ்தம்பித்த நிலையில் இந்தியாவிலும் அனைத்து தொழிற்துறைகளும் முடங்கின. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல், புத்தாண்டு தொடங்கியது முதல் மேலும் தளர்வுகளுடன் நாடும் மக்களும் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமே எதிர்பார்க்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் 14, 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகள், கால்நடை மருத்துவரிடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் புதன்கிழமை முதல் தகுதிச் சான்று வழங்கப்படுகிறது.

தகுதிச்சான்று பெறுவதற்கான நிபந்தனைகள்

  • 132 செ.மீ. உயரம் உள்ள 3 முதல் 8 வயதுடைய, திமில் உள்ள காளைகள் அனுமதிக்கப்படும்.

  • காளைகளுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு அறிகுறிகள் இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்பட்டு தகுதிச் சான்று அளிக்கப்படும்.

  • ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளையுடன் இருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்பதால், காளை உரிமையாளா் மற்றும் உதவியாளா் இருவரும் காளையுடன் இருக்கும் தபால் அட்டை அளவுள்ள புகைப்படம் இணைக்க வேண்டும்.

  • இருவரது ஆதாா் எண் குறிப்பிட வேண்டும் எனவும், அசல் ஆதாா் அட்டையை எடுத்த வரவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

  • புகைப்படத்தில் இருக்கும் இரு நபா்கள் மட்டுமே காளைகளை ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா்.

ஜனவரி 11ம் தேதி டோக்கன் விநியோகம்

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பவா்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். காளைகளுக்கு அனுமதிச்சீட்டு, காளை உரிமையாளா்கள், உதவியாளா்கள், மாடுபிடி வீரா்கள், விழா குழுவினருக்கு கொரோனா பரிசோதனை ஆகியவற்றை குறிப்பிட்ட நாள்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு காளைக்கு ஒரே ஒரு ஜல்லிக்கட்டில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி

மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தலா 300 காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா். ஒரே காளை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பங்கேற்க அனுமதித்தால், பலருக்கும் வாய்ப்பு கிடைக்காது.


அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் இவற்றில் ஏதாவதொரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே காளைகளை பங்கேற்க அனுமதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

6 தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் குடும்பம்! பாரம்பரியத்தை விரும்பும் பட்டதாரி!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முதல் முறையாக காப்பீடு!

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி- சில கட்டுப்பாடுகளுடன்!

English Summary: This pongal festival celebration With new Rules and Regulations for Jallikattu bull registration Published on: 06 January 2021, 05:59 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.