“காக்கை குருவி எங்கள் ஜாதி”, என்று கூறினான் முண்டாசு கவிஞன். குறிப்பாக குருவிகளுடன் பண்டைய தமிழர்களின் வாழ்கை ஒன்றான கலந்திருந்தது. விட்டு முற்றங்களில் சிதறிய தானியங்களை உண்டு நம் வீட்டிற்குள் கூடுகட்டி நம்மில் ஒருவராய் வசித்து வந்தது.
சிட்டு குருவிகள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே வாழ்ந்து வருவதாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவைகள் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை, நெல், போன்ற சிறுதானியங்களை விரும்பி உண்ணும். சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டுகள் என்றாலும், அவை பெரும்பாலும் மனிதர்களுடன் நெருங்கி வாழ்வதையே விரும்பும்.
குருவியின் வகைகள்
- சிட்டுக்குருவி
- தூக்கணாங்குருவி
- கருங்குருவி
- படை குருவி
போன்ற பல்வேறு வகையான குருவிகள் இருந்து வந்தன.
முன்னோரு காலத்தில் மனிதர்களை விட அதிக அளவில் இருந்து வந்த சிட்டு குருவிகள் இன்று அழிவின் விழிம்பில் இருக்கும் அறிய பறவை என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. இதுவரை உலக அளவில் 80 சதவிகிதம் சிட்டுகுருவிகள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் வேதயினையான செய்தி என்னவென்றால் இந்த அழிவிற்கு பின்னால் இருப்பது மனிதர்களாகிய நாமும், நமது அபிரிமிதமான விஞ்ஞான வளர்ச்சி ஆகும்.
சிட்டு குருவிகளின் அழிவு என்பது மனிதர்களுக்கும் பேராபத்து என்பதை உணர தவற விட்டோம் என்றே கூறலாம். இந்த சிறிய குருவியினம் அழிந்து போவதற்கு முக்கிய காரணம் நமது நவீன வாழ்கை முறை, நவீன விவசாயம் என்றே கூறலாம். பயிர்களுக்கு பயன்படுத்தபடும் பூச்சி கொல்லி மருந்துகள், அலைபேசி டவர்களின் கதிர் வீச்சுகள், அடுக்குமாடி கட்டடங்கள் போன்றவையாகும்.
இயற்கை முறை விவசாயத்தை ஊக்கப்படுத்துவதன் மூலமும், குருவிகளுக்கு மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் நன்மையை பயக்கும். முன்பெல்லாம் வயல்வெளிகளில் சாணங்களை கொட்டி இயற்கை உரமாக மாற்றி விவசாயம் செய்து வந்தனர். அந்த சாணக்குவியலில் புழுக்கள் உயிர் பெற்று வரும். அந்த புழுக்களை குருவிகள் கொத்தி தின்னும், அதே போன்று செடிகளை பாதிக்கும் சிறு பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை உண்டு நேர்த்தியான விவசாயம் நடை பெற உறுதுணையாக இருந்தது.
குருவிகளை அழிவில் இருந்து மீட்க என்ன செய்ய வேண்டும்?
குருவிகளுக்கு தினமும் நஞ்சில்லா தானியங்களை Feeder மூலமாவோ அல்லது மண்தட்டுக்களிலோ தினமும் வைக்க வேண்டும். அத்துடன் சிறிய மண்தட்டுக்களில் தண்ணீர் வைக்க வேண்டும். குருவிகள் கூடு கட்ட வீடு தோறும் சிறு மரப்பெட்டிகள் அல்லது மண்ணால் ஆன கூடுகளை வைப்போம். அழிவின் விளிம்பில் நிற்கும் குருவிகளை பாதுகாக்க உறுதிமொழி ஏற்போம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments