1. கால்நடை

கறவை மாடுகளில் பாலில் உள்ள சத்துக்களின் அளவை அதிகரிக்க சில வழிமுறைகள்

KJ Staff
KJ Staff

பாலில் கொழுப்புச்சத்து மற்றும் கொழுப்பு அல்லாத திடப்பொருள்களின் அளவைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பாலில் உள்ள சத்துக்களின் அளவு மாட்டின் இனம், கறவை நிலை, தீவனம் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பொறுத்து மாறுபடும். பாலில் உள்ள சத்துக்கள் - தண்ணீர் - 83-87 சதவீதம், கொழுப்பு-3-5 சதம் (பசும்பால்), 6-8 சதம் (எருமைப்பால்), புரதம்-3.5 -3.8 சதம், சர்க்கரை- 4.8 - 5.0 சதம். தாதுக்கள் - 0.7 சதம்.

பெருமளவு மாறுபடும் சத்துக்கள்: கொழுப்பு மற்றும் புரதம்.

சிறிதளவு மாறுபடும் சத்துக்கள்: சர்க்கரை மற்றும் தாதுக்கள்.

பாலில் கொழுப்புச்சத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்: 

  • மொத்த தீவனத்தில் நார்ச்சத்தின் அளவு 30 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். 
  • பசுந்தீவனங்கள் மட்டுமில்லாமல் உலர் தீவனங்களையும் கறவை மாடுகளுக்கு சேர்த்து கொடுக்க வேண்டும்.
  • நார்த்தீவனங்களை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்காமல் ஒரு அங்குலத்திற்கு மேல் இருக்குமாறு வெட்ட வேண்டும்.
  • கோ-3 அல்லது கோ-4 கம்பு நேப்பியர் புல்லை 40 முதல் 45 நாட்களுக்குள் அறுவடை செய்து தீவனமாக அளிக்க வேண்டும். 
  • பருத்திக்கொட்டைப் புண்ணாக்கு, புளியங்கொட்டைத்தூள், மரவள்ளிக்கிழங்கு திப்பி ஆகியவற்றை தீவனமாக அளிக்கலாம்.
  • தரம் குறைவான உலர்தீவனங்களான வைக்கோல் தட்டை ஆகியவற்றை பிரதான தீவனமாக கறவை மாடுகளுக்கு பயன்படுத்தும் போது தாது உப்புக்கலவை (30-50 கிராம்), புண்ணாக்கு வகைகள் (200-500 கிராம்) மற்றும் ஈஸ்ட் நொதி(10 கிராம்) கொடுக்க வேண்டும்.

பாலில் கொழுப்பில்லாத திடப்பொருள்கள் அதிகரிப்பதற்கான வழிமுறைகள்: 

  • கறவை மாடுகளுக்கு போதிய அளவு சரிவிகித சமச்சீர் தீவனம் அளிக்க வேண்டும். 
  • உதாரணமாக 10 லிட்டர் கறக்கும் மாட்டிற்கு உண்ணும் அளவிற்கு உலர்தீவனம், 30 கிலோ பசுந்தீவனம் மற்றும் ஒவ்வொரு 2.5 லிட்டர் பால் உற்பத்திக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனம் என்ற அளவில் கொடுக்க வேண்டும்.
  • கன்று ஈன்ற பின் முதல் 3 மாதங்களுக்கு ஒரு கிலோ தானிய மாவு (கம்பு, ராகி, சோளம், மக்காச்சோளம்) அளிக்க வேண்டும். 
  • நாள் ஒன்றுக்கு 15 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு அடர் தீவனத்தை 4 அல்லது 5 வேளையாக பிரித்து கொடுக்க வேண்டும். மேலும் ஒரு மாட்டிற்கு 30 கிராம் சோடியம் பைகார்பனேட் என்ற அளவில் கொடுக்க வேண்டும். 100 கிலோ கலப்புத் தீவனத்திற்கு 300-500 கிராம் சோடியம் பைகார்பனேட் சேர்க்கலாம்.
  • தவிடு புண்ணாக்கு மற்றும் தானிய மாவு ஆகியவற்றை ஊறவைத்து கொடுக்கலாம். தீவனத்தில் நொதி (20-30 கிராம்) கொடுப்பதால் செரிமானத் திறன் கூடுவதோடு கொழுப்பில்லாத திடப்பொருள்களின் அளவும் அதிகரிக்கும். 
  • கோடைகாலத்தில் வெப்பஅயர்ச்சி அதிகம் எனில் மாட்டை குளிப்பாட்ட வேண்டும். மேலும் தீவனத்தில் பேக்கரி ஈஸ்ட் (10 கிராம்) மற்றும் தாது உப்பு கலவை (50 கிராம்) அளிக்க வேண்டும். 
  • அதிக பால் சுரக்கும் மாடுகளுக்கு தானிய அறுவடைக்குப்பின் கிடைக்கும் வைக்கோல் தட்டைக்குப் பதிலாக சத்தான உலர்புல் அளிக்கலாம்.
English Summary: Tips to increase the Fat content in Milk Published on: 08 November 2018, 04:15 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.