வெளிப்புற மற்றும் சாலையோர உணவுகளை எளிதில் உட்கொள்ளும் கோழிகளைத் தாக்கும் கோழிக்கழிச்சல் நோயைத் தடுக்க வாரத்தோறும் தடுப்பூசிகள் போட்டப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசிகள் கால்நடை மருந்தகங்களில் போடப்படும் என்றும அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில், பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளது. கோழி வளர்ப்பு மூலம், குடும்பத்திற்கான முட்டை, இறைச்சி தேவைகளை அடைவதோடு, விற்பனை செய்வதால் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர்.
தடுப்பூசி முகாம்
கோழி வளர்ப்பு ஊரகப்பகுதிகளில், உபயோகமற்ற தானிய மிகுதிகளிலும், நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக, கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த, வாரந்தோறும் சனிக்கிழமை, கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கால்நடை மருந்தகங்களில் பெறலாம்
கால்நடை பராமரிப்புத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் கோழி நோய் தடுப்பூசி, இருவார முகாம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு இன்று (நேற்று ) முதல், வரும், 14 வரை, இரு வாரம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம், மாவட்டத்தில் நடக்கிறது. முகாம் தங்களது பகுதியில் நடக்கும் தேதியை, அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் அறிந்து, கோழிகளுக்கு இலவசமாக கோழி நோய் தடுப்பூசி மருந்தை செலுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
ராமநாதபுரத்தில் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து அறிய செயல் விளக்க பண்ணை அமைப்பு!
5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!
Share your comments