கால்நடை பராமரிப்புத்துறையின் (Department of Animal Care) மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்புக்காக கோழிகளுக்கு தடுப்பூசி (Vaccine) போடும் முகாம் இரண்டு வாரம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தடுப்பூசி போடும் முகாம் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
கோழிகளுக்கு தடுப்பூசி
முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி (Vaccine) போடப்படவுள்ளது. எனவே அனைத்து கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கோழி வளர்ப்போர் பங்கேற்று, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கோழிகளுக்கு தடுப்பூசியை போட்டுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்காக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் இந்த முகாமில் எண்ணற்ற விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த ஆண்டும் அதிக விவசாயிகள் முகாமிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
கோடை உழவின் அவசியம் மற்றும் பயன்கள்!
10 மரக்கன்றுகளை நட்டால், புதிய பைக் வாங்க 25,000 தள்ளுபடி! அதிரடி சலுகை!
Share your comments