நோய் வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கேற்ப கால்நடை மற்றும் கோழிகளுக்கு நோய் பாதிப்பு வராமல் தடுப்பதற்காகத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
உயிர்காக்கும் (Life-saving)
அவ்வாறு கால்நடைகளுக்குத் தடுப்பூசிகளைத் தகுந்த சமயத்தில் கால்நடை மருத்துவர் உதவியுடன் தவறாமல் போடுவதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து கால்நடைகளைப் பெருமளவில் காப்பாற்றி விடலாம்.
எனவே, கால்நடை வளர்ப்போர் தடுப்பூசி போடும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை முறையாகக் கடைபிடித்து, தமது தவறாமல் தடுப்பூசி போட்டு தமது கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போடும் வழிமுறைகள் (Vaccination procedures)
-
ஆரோக்கியமான கால்நடைகளுக்குத் தான் தடுப்பூசிகள் போட வேண்டியது அவசியம்.
-
வயதிற்கேற்ற அல்லது பருவத்திற்கேற்றத் தடுப்பூசியை உரிய நேரத்தில் போட வேண்டும்.
-
நோயக் கிளர்ச்சி ஏற்படுவதற்கு முன் தடுப்பூசி போடுவது முக்கியம்.
-
தடுப்பூசிகள் தகுந்த குளிர்சாதன வெப்பநிலையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
-
தடுப்பூசிகளைக் காலை அல்லது மாலை வேளைகளில் குளிர்ந்த நேரத்தில் தான் போட வேண்டும்.
-
வெயில் அதிகமுள்ள நேரத்தில் தடுப்பூசிகளைப் போடக் கூடாது.
-
கால்நடைகள் சினையாக இருந்தால் கால்நடை மருத்துவரிடம், எத்தனை மாத சினை என்பதை கூறிய பின் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படியேத், தடுப்பூசி போடுவதை முடிவு செய்ய வேண்டும்.
-
தடுப்பூசி போடும் பொழுது ஸ்டீராய்டு போன்ற மருத்துகளைக் கொடுக்கக்கூடாது.
-
வேறு எந்த மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் கால்நடை மருத்துவரிடம் தடுப்பூசி போடுவதற்கு முன் தெரிவிக்க வேண்டும்.
மேய்ச்சல் கூடாது (Do not graze)
தடுப்பூசி போட்ட பின் கால்நடைகளை இரண்டு நாட்கள் மேய்ச்சலுக்கு வெளியே அனுப்பாமல் கொட்டகையிலேயே வைத்து தண்ணீர் மற்றும் தீவனம் கொடுத்துப் பராமரிக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க...
மாதம் ரூ. 50,000 முதலீடு, 14 லட்சம் வருமானம்! 35% அரசு மானியம்! விவரம் இதோ
Share your comments