மதுரையில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெறும் கறவை மாடு, வெள்ளாடு மற்றும் நாட்டுக் கோழி வளர்க்கும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்புகள் (Training)
மதுரை, திருப்பரங்குன்றம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய ஒரு மாத கால பயிற்சியாக கறவை மாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக புதிய பயிற்சிகள் விரைவில் தொடங்க உள்ளன. தற்போது இதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர் வரும் 15.2.2021க்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
6 மாவட்டத்தினருக்கு வாய்ப்பு (Opportunity for 6 districts)
எனவே, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, இராமநாதபும் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கால்நடை விவசாயிகள் மற்றும் சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆர்வமுள்ளவர்கள் பயிற்சிகள் பற்றிய முழு விபரங்களை நேரில் அல்லது 0452 2483903 என்ற தொலைபேசி மூலமாக அறிந்து. பயிற்சிகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர் சௌ.சிவசீலன், கைபேசி எண் : 94429 37227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
நீங்க டிகிரி முடிச்ச பெண்ணா? அப்படினா உங்களுக்கு ரூ.50,000!
Share your comments